ராமர் கோயில் பாஜகவுக்கு உதவியதா? உ.பியில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்க என்ன காரணம்?

By Ramya s  |  First Published Jun 4, 2024, 4:27 PM IST

இந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் பெரும் பின்னடைவுக்கு பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 


2024 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 230 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கணித்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக வெளியாகி உருவாகி வருகின்றன.

குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசம் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. 80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களிலும், இந்தியா கூட்டணி 45 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

மக்களவை தேர்தலில் மாஸ்டர் ஸ்ட்ரோக் கொடுத்த அந்த ஐந்த முக்கிய திருப்பங்கள்!

2014 தேர்தலில் பாஜக 71 இடங்களிலும் 2019 தேர்தலில் பாஜக 71 மற்றும் 62 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் இந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் பெரும் பின்னடைவுக்கு பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ராமர் கோவில் பாஜகவுக்கு உதவியதா?

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவது என்பது பாஜகவின் நீண்ட கால தேர்தல் வாக்குறுதியாகும். 1980களில் இருந்தே பாஜக இந்த வாக்குறுதியை அளித்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. இது மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று பாஜக ஆதரவாளர்கள் கூறினர்.

ஆனால் அயோத்தியில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் கூட ராமர் கோயில் தன்னை முக்கிய காரணியாக உறுதிப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்று போக்குகள் காட்டுகின்றன. தேர்தல் ஆணைய தரவுகளின்படி, சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் பாஜகவின் லல்லு சிங்கை விட 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அண்டைத் தொகுதிகளைப் பார்த்தால், பைசாபாத் எல்லையில் உள்ள ஏழு தொகுதிகளில் இரண்டில் பாஜக முன்னிலை வகிக்கிறது - கோண்டா மற்றும் கைசர்கஞ்ச். மற்ற 5 தொகுதிகளில், அமேதி மற்றும் பாரபங்கி ஆகிய இரண்டில் காங்கிரசும், சுல்தான்பூர், அம்பேத்நகர் மற்றும் பஸ்தி ஆகிய மூன்றில் சமாஜவாதியும் முன்னிலை வகிக்கின்றன.

ஆந்திர சட்டப்பேரவையில் ஜெகன் மோகனை வீழ்த்திய சந்திரபாபு நாயுடு.. வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி கடைசியாக 2017 உத்திரபிரதேச தேர்தலுக்கு முன்னதாக ஒன்றாக பிரச்சாரம் செய்தனர், ஆனால் முடிவுகள் வந்தபோது, ​​பாஜக 302 இடங்களை பெற்றிருந்தது, காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி 47 இடங்களை மட்டுமே பெற்றது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு தலைவர்கள், அரசியல் ரீதியாக மிகவும் முதிர்ச்சியடைந்த இருவரும், மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில் இருந்து இருவரும் மீண்டும் ஒன்றாகக் காணப்பட்டனர். இந்த முறை ராகுல் - அகிலேஷ் இருவரும் கேம் சேஞ்சராக இருந்திருக்கலாம்.

மாயாவதி காரணி இல்லை

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 2014 லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேசத்தில் பிஎஸ்பி வெற்றி பெறவில்லை, ஆனால் 2019 தேர்தலில் 10 இடங்களை கைப்பற்றி வலுவாக மீண்டும் வந்தது. கடந்த தேர்தலில், அது சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்திருந்தது, ஆனால் இந்த முறை அக்கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி, எந்த இடத்திலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!