மக்களவை தேர்தலில் மாஸ்டர் ஸ்ட்ரோக் கொடுத்த அந்த ஐந்த முக்கிய திருப்பங்கள்!

By Manikanda Prabu  |  First Published Jun 4, 2024, 4:23 PM IST

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முக்கியத் திருப்பத்தை ஐந்து விஷயங்கள் ஏற்படுத்தியுள்ளன


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் முந்தும் காங்கிரஸ், ஒடிசாவில் பிஜு ஜனதாதளத்தை பாஜக பின்னுக்கு தள்ளியது என ஆச்சரியத்துக்கு மேல், ஆச்சரியமளித்து  வருகிறது தேர்தல் முடிவுகள்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளில் ஐந்து விஷயங்கள் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு;

Latest Videos

undefined

** முதல் அதிர்ச்சி கொடுத்தது உத்தரப்பிரதேச மாநிலம்தான். 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் இந்தியக் கூட்டணி 42 இடங்களிலும், பாஜக 37 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 2014 தேர்தலில் 71 இடங்களிலும், 2019 தேர்தகில் 76 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

** ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 19 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவின் கை ஓங்கியுள்ளது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரியணையில் இருந்து கீழே இறக்கப்பட்டு பாஜகவின் முதல்வர் பதவியேற்கவும் வாய்ப்புள்ளது.

** இந்த தேர்தலில் பாஜகவின் தனிப்பட்ட செயல்பாடு அதன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ஆனால், பாஜகவின் கூட்டணி கட்சிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. கடந்த 2019 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 224 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், இம்முறை பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட குறைவான தொகுதிகளிலேயே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

Loksabha Election 2024 Result மத்தியில் ஆட்சி அமைவதற்கு காரணமாகும் முக்கிய நபர்கள்!

** பாஜகவுக்கு அதிர்ச்சியளித்த மற்றொரு மாநிலம் மகாராஷ்டிரா. அம்மாநிலத்தின் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 29 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு காரணம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை பாஜக உடைத்ததன் அதிருப்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

** 2024 மக்களவைத் தேர்தலில் 370-401 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கணித்திருந்தன. இருப்பினும், இந்திய கூட்டணி 230 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 295 இடங்களில் மட்டுமே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

click me!