பல நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு எண்ணிக்கைகள் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று எளிதாக ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன. பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 350 இடங்கள் வரை கிடைக்கும் என பெரும்பாலான எக்ஸிட் போல் எண்ணிக்கைகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் இன்று முடிந்ததை அடுத்து ஊடகங்களில் வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு மீண்டும் வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்பார் என்று கணிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்றும் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
பல நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு எண்ணிக்கைகள் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று எளிதாக ஆட்சி அமைக்கும் என்று கூறுகின்றன. பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 350 இடங்கள் வரை கிடைக்கும் என பெரும்பாலான எக்ஸிட் போல் எண்ணிக்கைகள் தெரிவிக்கின்றன.
undefined
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 34-38, பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 0-5, மற்ற கட்சிகளுக்கு 0-1 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என ஜன் கீ பாத் எக்ஸிட் போல் தெரிவித்திருக்கிறது.
ஜன்கி பாத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு!! pic.twitter.com/nI5PaVeYhw
— Asianetnews Tamil (@AsianetNewsTM)மக்களவைத் தேர்தலுக்கான சில முன்னணி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவரம் பின்வருமாறு:
ரிபப்ளிக் பிமார்க்: பாஜக கூட்டணி 359, இந்தியா கூட்டணி 154, பிற கட்சிகள் 30
ரிபப்ளிக் மேட்ரிஸ்: பாஜக கூட்டணி 353-368, இந்தியா கூட்டணி 118-133, பிற கட்சிகள் 43-48
இந்தியா நியூஸ் - டைனமிக்ஸ்: பாஜக கூட்டணி 371, இந்தியா கூட்டணி 125, பிற கட்சிகள் 47
டிவி தெலுங்கு: பாஜக கூட்டணி 359, இந்தியா கூட்டணி 154, பிற கட்சிகள் 30
ஜன்கி பாத்: பாஜக கூட்டணி 362-392, இந்தியா கூட்டணி 141-161, பிற கட்சிகள் 10-20
டைனிக் பாஸ்கர்: பாஜக 281-350, இந்தியா கூட்டணி 145-201, பிற கட்சிகள் 34-39
நியூஸ் நேஷன்: பாஜக கூட்டணி 342-378, இந்தியா கூட்டணி 153-169, பிற கட்சிகள் 21-23
மாநில வாரியான எக்ஸிட் போல் 2024 கணிப்புகள் (ஜன் கீ பாத்) பின்வருமாறு:
தமிழ்நாடு
NDA - 0-5
INC - 34-38
Others - 0-1
கேரளா
NDA - 2-3
INC - 17-18
Others - 0 - 1
கர்நாடகா
NDA - 23-26
INC - 3-7
Others - 0
ஆந்திரப் பிரதேசம்
BJP - 2-3
TDP - 10-14
YSRCP - 13-8
தெலுங்கானா
NDA - 9-12
INC - 7-4
Others - 0-2
Republic PMARQ எக்ஸிட் போல் 2024: அடிச்சுத் தூக்கும் பாஜக! தப்புக் கணக்கு போட்டு இந்தியா கூட்டணி!
ஜன்கி பாத்தின் தேசிய அளவிலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள். pic.twitter.com/gLzpYXKk8p
— Asianetnews Tamil (@AsianetNewsTM)மத்தியப்பிரதேசம்
NDA - 28-29
INC - 1
Others - 0
உத்தரப் பிரதேசம்
NDA - 68-74
INDIA - 12-6
Others - 0
மகாராஷ்டிரா
NDA - 34-41
INDIA - 16-9
Others - 0
குஜராத்
NDA - 25-26
INC - 0-1
Others - 0
சத்தீஸ்கர்
NDA - 1-0-11
INC - 0-1
Others - 0
டெல்லி
NDA - 6-7
INC - 0-1
Others - 0
கோவா
NDA - 1
INC - 1
Others - 0
தமிழ்நாட்டை மீண்டும் கைப்பற்றுகிறதா திமுக? இலை, தாமரை மலருமா? கருத்துக்கணிப்பு முடிவு சொல்வது என்ன?
ராஜஸ்தான்
NDA - 16-19
INC - 5-7
Others - 1-2
ஜார்கண்ட்
NDA - 8-10
INC - 4-6
Others - 0
பீகார்
NDA - 29-33
INC - 7-10
Others - 0
மேற்கு வங்கம்
NDA - 21-26
INC - 2-0
TMC - 18-16
Others - 0-1
மக்களவைத் தேர்தல் 2024:
2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் தொடங்கியது. 44 நாள்களாக நீடித்த அடுத்தடுத்த கட்ட தேர்தல்களுக்குப் பின் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குபதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.
ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருமா? எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மாற்றத்தைக் கொண்டுவருமா? என்ற கேள்விகளுக்கு அன்றைய தினம் முடிவு தெரிந்துவிடும்.
ஜன் கீ பாத் எக்ஸிட் போல் 2024: விண்ணை முட்டும் ஆதரவுடன் வெல்லும் பாஜக! மீண்டும் மோடி ஆட்சி!
சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு:
மக்களவைத் தேர்தல் 2024 தேர்தலுடன் நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் 75 இடங்கள், அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் 60 இடங்கள், ஒடிசா சட்டமன்றத்தில் 147 இடங்கள், சிக்கிம் சட்டமன்றத்தில் 32 இடங்கள் உள்ளன.
அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஜூன் 2ஆம் தேதியும், ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து ஜூன் 4ஆம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.
ஆந்திராவில் ஆட்சி மாறுமா?
175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 94-104 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் என்று ஆரா நிறுவனத்தின் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணிக்கு 71-81 இடங்கள் கிடைக்கலாம் எனவும் கணித்துள்ளது.
ஆத்ம சாக்ஷி எஸ்ஏஎஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 98-116 இடங்களையும், என்.டி.ஏ.வுக்கு 59-77 இடங்களையும் வழங்கியுள்ளது.
ஆ்ந்திராவில் ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவுவதாக ஸ்மார்ட் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 93 இடங்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு 80 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.
AP Exit Poll Survey 2024 : மீண்டும் ஆட்சி அமைப்பாரா ஜெகன் மோகன்? அல்லது சந்திரபாபு நாயுடு வெல்வாரா?