மோடி 3.0 உறுதி! பாஜக கூட்டணிக்கு 350 சீட்! இந்தியா கூட்டணிக்கு ஷாக் கொடுத்த எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள்!

By SG Balan  |  First Published Jun 1, 2024, 7:37 PM IST

ஐந்து கருத்துக்கணிப்புகளின்படி சராசரியாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 365 இடங்கள், இந்தியா கூட்டணிக்கு 142 இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது


மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ஆனால், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றும் என்ற பாஜகவின் கணக்கை எந்த கருத்துக்கணிப்பும் பிரதிபலிக்கவில்லை. அதே வேளையில், பல நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளின்படி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மிகவும் பின்தங்கிவிடும் என்று கணித்துள்ளன.

Latest Videos

undefined

ஐந்து கருத்துக்கணிப்புகளின்படி சராசரியாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 365 இடங்கள், இந்தியா கூட்டணிக்கு 142 இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.

ஜன் கீ பாத் எக்ஸிட் போல் 2024: விண்ணை முட்டும் ஆதரவுடன் வெல்லும் பாஜக! மீண்டும் மோடி ஆட்சி!

மன்கி பாத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக கணிப்பு!! pic.twitter.com/D6R3Co6Rf0

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிகபட்சமாக என்.டி.ஏ. 362-392 இடங்கள் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளுக்கு 141-161 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா நியூஸ்-டி டைனமிக்ஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 371 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 125 இடங்களும் கிடைக்கும் எனக் கணித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி-பி மார்க் என்.டி.ஏ.வுக்கு குறைந்த எண்ணிக்கையை வழங்கியுள்ளது. பாஜக கூட்டணி 359, இந்தியா கூட்டணி 154 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளது. ரிபப்ளிக் பாரத் - மேட்ரிக்ஸ் கணிப்பில், என்.டி.ஏ. 353 - 368, இந்தியா கூட்டணி 118- 133, மற்றவை 43-48 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியா நியூஸ் - டைனமிக்ஸ் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் பாஜக 371 தொகுதிகள், காங்கிரஸ் 125 தொகுதிகள், பிற காட்சிகள் 47 தொகுதிகள் பெறும் எனக் கூறுகிறது. டிவி தெலுங்கு கருத்துக்கணிப்பில் பாஜக 359, காங்கிரஸ் 154, பிற கட்சிகள் 30 தொகுதிகள் பெறும் எனத் தெரிவிக்கிறது.

2024 மக்களவைத் தேர்தல்:

2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் தொடங்கியது. 44 நாள்களாக நீடித்த அடுத்தடுத்த கட்ட தேர்தல்களுக்குப் பின் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குபதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.

மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுகின்றன. நாடு முழுவதும் எதிர்நோக்கி இருக்கும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

Republic PMARQ எக்ஸிட் போல் 2024: அடிச்சுத் தூக்கும் பாஜக! தப்புக் கணக்கு போட்டு இந்தியா கூட்டணி!

click me!