Republic PMARQ எக்ஸிட் போல் 2024: அடிச்சுத் தூக்கும் பாஜக! தப்புக் கணக்கு போட்டு இந்தியா கூட்டணி!

By SG Balan  |  First Published Jun 1, 2024, 7:09 PM IST

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) 359 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 154 இடங்களையே பெறும் எனவும் Republic PMARQ நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.


2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு Republic PMARQ நடந்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் மோடி தலைமையில் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளது.

நடந்து முடிந்த நாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) 359 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 154 இடங்களையே பெறும் எனவும் Republic PMARQ நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

மற்ற கட்சிகளுக்கு 30 தொகுதிகள் கிடைக்கும் எனவும் Republic PMARQ கிடைக்கும் என்று சொல்லபட்டுள்ளது.

ஜன் கீ பாத் எக்ஸிட் போல் 2024: விண்ணை முட்டும் ஆதரவுடன் வெல்லும் பாஜக! மீண்டும் மோடி ஆட்சி!

மக்களவைத் தேர்தல் 2024:

2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் தொடங்கியது. 44 நாள்களாக நீடித்த அடுத்தடுத்த கட்ட தேர்தல்களுக்குப் பின் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குபதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.

மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுகின்றன. நாடு முழுவதும் எதிர்நோக்கி இருக்கும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

AP Exit Poll Result 2024 : மீண்டும் ஆட்சி அமைப்பாரா ஜெகன் மோகன்? அல்லது சந்திரபாபு நாயுடு வெல்வாரா?

click me!