ஜேடியு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வெளியேறியதால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இப்போது எந்தக் கட்சிகள் உள்ளன, 2019 தேர்தலில் அவை எத்தனை இடங்களைப் பெற்றன என்பதைப் பார்க்கலாம்.
2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பிரசாரம் துவங்கிவிட்டது. கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. பிரதமர் மோடி பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார்.
மறுபுறம், தேர்தல் களத்தில் பிரதமர் மோடியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஜேடியு பிரிந்ததால் இந்தியா கூட்டணியின் பலம் குறைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் முயற்சி செய்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இப்போது இந்தியா கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் உள்ளன, 2019 பொதுத்தேர்தலில் அவை எத்தனை இடங்களைப் பெற்றன என்பதைப் பார்க்கலாம்.
காங்கிரஸ்: இந்திய கூட்டணியில் உள்ள பெரிய கட்சி காங்கிரஸ். 2019 பொதுத் தேர்தலில் அக்கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரசுக்கு நேரடிப் போட்டியாக பாஜக உள்ளது.
எலக்ட்ரானிக் கழிவுகளைத் தங்கமாக மாற்றலாம்! புதிய வழியைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
திமுக: தமிழக சட்டசபையில் திமுக மிகப்பெரிய கட்சி. இந்தியா கூட்டணியிலும் முக்கியக் கட்சியாக உள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தக் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களைப் பெற்றிருந்தது.
ஆம் ஆத்மி கட்சி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இருப்பினும், மக்களவையில் ஆம் ஆத்மி எம்பிக்கள் எண்ணிக்கை ஒன்றுதான்.
ஆர்ஜேடி: ஆர்ஜேடி பீகாரைச் சேர்ந்த மாநிலக் கட்சி. பீகார் சட்டசபையில் ஆர்ஜேடி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 75 ஆக உள்ளது. ராஜ்யசபாவில் ஆறு எம்.பி.க்களைக் கொண்டுள்ளது, ஆனால் மக்களவையில் ஒரு எம்.பி.கூட இல்லை.
சமாஜ்வாடி கட்சி: சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார். இக்கட்சிக்கு மூன்று மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்: 2019 மக்களவைத் தேர்தலில், சிபிஐ 49 இடங்களில் போட்டியிட்டு இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. சிபிஐ (எம்.) 71 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றது. சிபிஐ-எம்எல் கட்சிக்கு மக்களவை எம்பிக்கள் இல்லை.
தேசியவாத காங்கிரஸ்: கடந்த ஆண்டு என்சிபி பிளவுக்கு முன், 2019 மக்களவைத் தேர்தலில் என்சிபி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது என்சிபியின் சரத் பவார் அணிக்கு மக்களவையில் மூன்று எம்பிக்கள் உள்ளனர்.
தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ கோரிக்கை
சிவசேனா (யுபிடி): சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணிக்கு 6 எம்பிக்கள் உள்ளனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கட்சிக்கு மக்களவையில் ஒரு இடம் மட்டும் உள்ளது.
அப்னா தளம்: மக்களவையில் அப்னா தளம் (காமராவாடி) கட்சிக்கு எந்த இடமும் இல்லை.
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி 2019 தேர்தலில் 3 இடங்களில் வெற்றி பெற்றது.
மக்கள் ஜனநாயக கட்சி: ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தற்போது மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மக்களவையில் மூன்று எம்.பி.க்கள் உள்ளனர்.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி: மக்களவையில் ஆர்எஸ்பிக்கு ஒரே ஒரு எம்.பி. மட்டும் இருக்கிறார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக்: இந்தக் கட்சிக்கு எம்.பி.க்கள் யாரும் இல்லை.
மதிமுக: ம.தி.மு.க.வுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடித்தளம் உள்ளது. ஆனால், மக்களவையில் எந்த இடமும் இல்லை.
விசிக: மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு எம்.பி. இருக்கிறார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: இந்தக் கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை.
மனிதநேய மக்கள் கட்சி: ஜவாஹிருல்லா தலைமையிலான இந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை.
கேரள காங்கிரஸ் (மணி): இந்தக் கட்சிக்கு மக்களவையில் ஒரு இடம் உள்ளது.
கேரள காங்கிரஸ் (ஜோசப்): இந்தக் கட்சிக்கு மக்களவையில் இடம் இல்லை.
இஸ்ரேலில் இந்தியர் பலி! லெபனான் நடத்தி ஏவுகணை தாக்குதல்... இந்தியர்களுக்கு எச்சரிக்கை