உணவகத்தில் மவுத் ப்ரெஷ்னருக்கு பதில் Dry ice-ஐ கொடுத்த ஊழியர்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவ்வம்..

By Ramya s  |  First Published Mar 5, 2024, 3:47 PM IST

குருகிராம் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்ட பின்னர் மவுத் ப்ரெஷ்னரை (mouth freshener), உட்கொண்ட 5 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது..


குருகிராம் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்ட பின்னர் மவுத் ப்ரெஷ்னரை (mouth freshener), உட்கொண்ட 5 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.. கடந்த சனிக்கிழமை கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் நான்கு நண்பர்களுடன் செக்டார் 90 இல் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தி உள்ளார். பின்னர், ஒரு பணியாளர் அவர்களுக்கு மவுத் ப்ரெஷ்னரை வழங்கி உள்ளார். அவர்களின் ஐந்து பேர் அதை உட்கொண்டதாகவும் அதை தொடர்ந்து உடனடியாக அவர்களின் உடல்நிலை வேகமாக மோசமடைந்தது, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடனர் என்றும் கூறப்படுகிறது..

அந்த உணவகத்தில் கொடுக்கப்பட்ட மவுத் ப்ரெஷ்னரில் இருந்த ட்ரை ஐஸ் என்ற வேதிப்பொருள் இருந்ததாகவும், அதை உட்கொண்டால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று மருத்துவர் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

தூங்கிக்கொண்டிருந்த கணவன்.. கத்தியால் குத்திய மனைவி - எதனால் தெரியுமா? போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து புகார்தாரர் காவல்துறையில் புகார் அளித்தார். மவுத் ப்ரெஷ்னரை உட்கொண்ட பிறகு, வாயில் எரிச்சல், இரத்தப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவை ஏற்பட்டதாகவும் இதை தொடர்ந்து நான்கு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த புகாரைத் தொடர்ந்து, கெர்கி தௌலா காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகள் 328 (தீங்கு விளைவிக்கும் விஷப் பொருட்கள்) மற்றும் 120-பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

செக்டார் 90ல் உள்ள ஒரு உணவகத்தில் வாய் ப்ரெஷ்னராகப் பரிமாறப்பட்ட ட்ரை ஐஸ் காரணமாக வாயில் புண் ஏற்பட்டதை அடுத்து, அங்கு பணிபுரிந்த பணிப்பெண் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 6 பேரில் 5 பேர் துகள்களை அதை உட்கொண்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் தற்போது நகரத்தில் உள்ள ஆர்வி மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இளைஞர் உயிரை காவு வாங்கிய ரூ.10 லட்சம் மதிப்புள்ள கேமரா.. ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

இன்ஸ்பெக்டர் மனோஜ் இதுகுறித்து பேசிய போது " மவுத் ப்ரெஷ்னர்களுக்கு பதிலாக உலர் ஐஸ் அடங்கிய பையை பணியாளர் தவறுதலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதை நாங்கள் கண்டுபிடித்தோம். ட்ரை உணவகத்தில் ஏன் வைக்கப்பட்டது மற்றும் பணியாளர் எப்படி தவறாக புரிந்து கொண்டார்கள் என்பதை அறிய தடயவியல் ஆய்வுக்காக உலர் பனிக்கட்டியின் மாதிரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார். 

ட்ரை ஐஸ் என்றால் என்ன?

ட்ரை ஐஸ் என்பது உறைந்த கார்பன் டை ஆக்சைடால் ஆனது, இது மற்ற ஐஸ்கட்டிகளை உருகாது. மாறாக வளிமண்டல அழுத்தத்தில் திடப்பொருளிலிருந்து வாயுவாக நேரடியாக மாறுகிறது, இது பதங்கமாதல் என அழைக்கப்படுகிறது. தண்ணீரில் வைக்கப்படும் போது, ​​உலர்ந்த பனி கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது,. உறைபனி வெப்பநிலை காரணமாக, உறைபனியைத் தவிர்க்க கையுறைகள் அல்லது இடுக்கிகளுடன் உலர் பனியைக் கையாள்வது அவசியம், மேலும் அதை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. இது ஆபத்தை ஏற்படுத்தலாம்.

click me!