பெங்களூருவுக்கு டபுள் சிக்கல்.. வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்குமாம்.. வானிலை மையம் கணிப்பு..

By Ramya s  |  First Published Mar 5, 2024, 4:24 PM IST

பெங்களூரு நகரில் இந்த ஆண்டு கோடைகாலத்தில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.


பெங்களூரு நகரம் தண்ணீர் தட்டுப்பாட்டல் தவித்து வரும் நிலையில், 'இந்தியாவின் சிலிக்கான் வேலி' பெங்களூரு தற்போது இரட்டை பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. பெங்களூரு நகரில் இந்த ஆண்டு கோடைகாலத்தில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்த கோடை காலம் வழக்கமான சராசரியை வெப்பநிலையை விட 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

கடந்த மாதம் பெங்களுருவில் சராசரியாக 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. இது வழக்கத்தை விட 3.6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். புவி வெப்படைதல் காரணமாவே வெப்பநிலை அதிகரித்துள்ளது பெங்களூரு வானிலை மையத்தை சேர்ந்த் மூத்த விஞ்ஞானி ஏ பிரசாத் தெரிவித்தார். 

Latest Videos

undefined

பொதுவாக, பெங்களூருவில் மார்ச் மாதத்தில் சராசரியாக 33.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படும், ஆனால் இந்த ஆண்டு, சில நாட்களில் அது 35.5 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும். இதேபோல், ஏப்ரல் மாத சராசரி வெப்பநிலையான 34.1 டிகிரி செல்சியஸ் 36 டிகிரி செல்சியஸாக உயரக்கூடும், மேலும் மே மாதத்தில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும், இது வழக்கமான 33.1 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு தவிர, கர்நாடகாவின் பிற பகுதிகளிலும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலோரப் பகுதிகள் மற்றும் வடக்கு உள் கர்நாடகம் மார்ச் இறுதிக்குள் வெப்ப அலைகளை எதிர்கொள்ளக்கூடும், இது ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பருவமழையின் போது இயல்பை விட 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. பெங்களூரில் மார்ச் மாதத்தில் 14.7 மிமீ, ஏப்ரலில் 61.7 மிமீ, மே மாதத்தில் 128.7 மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறண்ட வானிலை மார்ச் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்றும், மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திற்குப் பிறகு பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பிரசாத் தெரிவித்தார்..

click me!