Loksabha Election 2024 543 Seats Details : மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்ட அறிவிப்பில் 7 கட்டமாக இந்திய அளவில் 543 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி முதல் துவங்கும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
7 கட்டமாக 543 தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்குப்பதிவு
முதல் கட்டமாக அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்... என்னென்ன அடிப்படை வசதிகள் இருக்கும்? தேர்தல் ஆணையம் விளக்கம்
இரண்டாம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 26ம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டமாக அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதி 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்
நான்காம் கட்டமாக ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மே 13ஆம் தேதி 96 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்
ஐந்தாம் கட்டமாக பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், அந்தமான், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மே 25ஆம் தேதி 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆறாம் கட்டமாக பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, உ.பி., மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
இறுதியாக 7ம் கட்டமாக பீகார், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உ.பி., மேற்கு வங்காளம், சண்டிகர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையம் விளக்கம்