10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்... என்னென்ன அடிப்படை வசதிகள் இருக்கும்? தேர்தல் ஆணையம் விளக்கம்

By SG Balan  |  First Published Mar 16, 2024, 4:53 PM IST

நாடு முழுவதும் உள்ள அனைத்து 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளிலும் வாக்களிப்பதை மேலும் வசதியானதாக மாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எடுத்துரைத்தார்.


நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதல் கட்டத்தில் தமிழ்நாடு வாக்களிக்க உள்ளது. ஜூன் 1ஆம் தேதி நடக்கும் இறுதிகட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்களிக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதாக அறிவித்துள்ளது. குடிநீர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கழிப்பறைகள், சக்கர நாற்காலி மற்றும் சாய்வுதள பாதை உள்ளட்ட வசதிகள் இருக்கும்.

Latest Videos

undefined

மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவிக்க செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இந்த வசதிகள் குறித்து அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள அனைத்து 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் வசதி மையம், உதவி மையம், வாக்குச்சாவடி பெயர் பலகை, காத்திருப்போருக்கான கொட்டகை போன்ற வசதிகள் இருக்கும் என்று கூறினார்.

Lok Sabha Election 2024: 7 கட்டங்களாக வாக்குப்பதிவு.. வேட்பு மனு தாக்கல் நாள் என்ன? முழு தகவல்கள் இதோ!

வாக்குச் சாவடிக்குள் போதுமான வெளிச்சத்து உறுதி செய்வது உள்பட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்கும் எனவும் ராஜீவ் குமார் கூறினார். மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் சாவடிகளை உருவாக்குவது மட்டுமின்றி, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும், வாக்களிப்பதை மேலும் வசதியானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன என்றும் ராஜீவ் குமார் எடுத்துரைத்தார்.

வெளிப்படையான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொதுத் தேர்தலை நடத்த உறுதியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1.82 கோடு வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையம் விளக்கம்

click me!