தேர்தலில் வங்கிகளுக்கு முக்கியமான ரோல்! தினமும் தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட்!

By SG Balan  |  First Published Mar 16, 2024, 5:28 PM IST

தேர்தலை முன்னிட்டு அனைத்து வங்கிகளும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்த தினசரி அறிக்கைகளை அனுப்ப வேண்டும் என்றும் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.


வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வங்கிகள் தினசரி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். அந்த அறிக்கைகள் மூலம் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை பற்றி விவரம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படும்.

அனைத்து வங்கிகளும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்த தினசரி அறிக்கைகளை அனுப்ப வேண்டும் என்றும் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார். பண பலத்தின் தாக்கத்தை தடுக்க, நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

"வெவ்வேறு மாநிலங்களில் வித்தியாசமான பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் அறிவோம். அளவுக்கு அதிகமாகப் பணப் புழக்கம் நடைபெறகிறதா என்பதை NPCI, GST போன்ற ஏஜென்சிகள் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும்" என்று ராஜீவ் குமார் கூறினார்.

மதுபானம், பணம், இலவசங்கள், போதைப்பொருள் ஆகியவற்றின் விநியோகத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக இலவசங்களை  விநியோகம், சட்டவிரோத ஆன்லைன் பணப் பரிவர்த்தனை போன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையம் விளக்கம்

வங்கி வாகனங்களில் மாலைக்குப் பிறகு பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் டெல்லியில் மக்களவைத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். 

நடைபெறவுள்ள தேர்தல் நம் அனைவருக்கும் கிடைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு என்ற அவர், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை அதிகரிக்கும் வகையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மொத்தம் உள்ள 97.8 கோடி வாக்காளர்களில் 49.72 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர்; 47.1 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் 1.5 கோடி பணியாளர்கள் இருப்பார்கள். வாக்கு செலுத்த 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுதப்படும் என்றும் ராஜீவ் குமார் சுட்டிக்காட்டினார்.

10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்... என்னென்ன அடிப்படை வசதிகள் இருக்கும்? தேர்தல் ஆணையம் விளக்கம்

click me!