4 இந்திய கம்பெனிகளுக்கு லைசென்ஸ்.. கொரோனாவை அடித்து தூக்க 127 நாடுகளுக்கு அனுப்பப்படும் ரெம்டெசிவிர் மருந்து!

By Thiraviaraj RMFirst Published May 13, 2020, 12:55 PM IST
Highlights

கொரோனாவை அடித்துத் தூக்க 127 நாடுகளுக்கு  ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து அனுப்ப 4 இந்திய கம்பெனிகள்  லைசென்ஸ் பெற்றுள்ளன. 

கொரோனாவை அடித்துத் தூக்க 127 நாடுகளுக்கு  ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து அனுப்ப 4 இந்திய கம்பெனிகள்  லைசென்ஸ் பெற்றுள்ளன. 

கரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோராகுவின் என்ற மருந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போதுரெம்டெசிவிர் எனும் மருந்து கரோனாவுக்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இந்த மருந்து கடந்தஜனவரி மாதத்திலேயே பயன்பாட்டுக்கு வந்தது. கரோனா தொற்று மிதமான மற்றும் தீவிர நிலையில் உள்ளவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டது. சமீபத்திய ஆராய்ச்சி முடிவின்படி இம்மருந்தை எடுத்துக் கொள்பவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைவதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் ஜில்லியாட் சைன்ஸஸ் இந்தியாவின் நான்கு கம்பெனிகளுக்கு லைசென்ஸ் அல்லாத ரெம்டெசிவிர் (கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்து) மருந்தை பேட்டண்ட் இல்லாமல் உருவாக்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்தை செய்துள்ளது.

ஜூபிலியண்ட் லைஃப் சைன்ஸஸ், சிப்லா, ஹெட்ரோ லேப்ஸ், மைலன் என்.வி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஜில்லியாட் சைன்ஸஸ். இதன்மூலம் 127 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான மருந்தை இந்தியாவின் நான்கு கம்பெனிகளும், பாகிஸ்தானின் ஃபெரோஸ்சன்ஸ் உட்பட ஐந்து கம்பெனிகள் உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

மிக முக்கியமான அறிவிப்பாக, ரெம்டெசிவிர் மருந்துக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 பாதிப்பை உலக தொற்றாக அறிவித்ததை முடித்துக்கொள்ளும் வரையிலோ அல்லது கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து கண்டறியப்படும் வரையிலோ, இந்த ரெம்டெசிவிர் மருந்துக்கான ராயல்டியைப் பெறப்போவதில்லை என அறிவித்துள்ளது ஜில்லியாட். ரெம்டெசிவிர் மருந்துக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 பாதிப்பை உலக தொற்றாக அறிவித்ததை முடித்துக்கொள்ளும் வரையில் ஜில்லியாட் நிறுவனம் ராயல்டி பெறாது.

click me!