தோளில் தாலாட்டி சீராட்டி வளர்த்த தாயின் உடலை தோளில் சுமந்து உடலுக்கு தீ மூட்டி கலங்கிய பிரதமர் மோடி..

Published : Dec 30, 2022, 10:50 AM ISTUpdated : Dec 30, 2022, 10:57 AM IST
தோளில் தாலாட்டி சீராட்டி வளர்த்த தாயின் உடலை தோளில் சுமந்து உடலுக்கு தீ மூட்டி கலங்கிய பிரதமர் மோடி..

சுருக்கம்

வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தியை அறிந்து பிரதமர் மோடி அவசர அவசரமாக குஜராத் விரைந்தார். 

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் குஜராத் மாநிலம் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது.

வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தியை அறிந்து பிரதமர் மோடி அவசர அவசரமாக குஜராத் விரைந்தார். அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த தாயார் உடலுக்கு கலங்கிய நிலையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தாயாரின் காலை தொட்டு வணங்கினார். 

இதையும் படிங்க;- குஷ்பு முதல் சோனு சூட் வரை... பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சினிமா நட்சத்திரங்கள்

இதன் பின்னர் தனது தாயார் உடலை பிரதமர் மோடி சோகத்துடன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றினார். அந்த வாகனத்தில் மோடியும் பயணம் செய்தார். இதையடுத்து, தாயாரின் உடல் உடனடியாக இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. 

பின்னர், காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயாரின் உடலுக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். மிகவும் இறுக்கமான முகத்துடன் சோகத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க;-  அர்ப்பணிப்பின் உருவமான அம்மா! ஹீராபென் மோடி வாழ்க்கை வரலாறு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!