சபரிமலையில் ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை நடை திறக்கப்பட்டு வருகின்ற ஜன.20ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு பெற்று அண்மையில் கோவில் நடை சாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வின் போது சேதமடைந்த பல்புகள், மின் கம்பிகளை மாற்றம் செய்யும் பணிகளும் தொடர்ந்து வருகின்றன.
சபரிமலையில் நிறைவு பெற்ற மண்டல பூஜை; ஹரிவராசனம் பாடி நடை அடைப்பு
இந்த ஆண்டு பக்தர்களின் தேவைக்காக உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் கோவில் நிர்வாகம் சிறப்பாக வழங்கி வருகின்றது. அந்த வகையில் பக்தர்கள் செல்லும் பாதையில் தேவையான பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்தும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழகம் முழுவதும் 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இந்நிலையில் மண்டல பூஜையைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜை வருகின்ற ஜனவரி 14ம் தேதி நடைபெறவுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இன்று முதல் ஜனவரி 20ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்று சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.