பீகார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்கள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பீகார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்கள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ரயில்வே அமைச்சராக லாலுபிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வே துறைக்கு நிலங்களை கொடுத்து வேலைபெறும் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
2008-09ம் ஆண்டில் மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்பூர், ஹஜிபூர் ஆகிய ரயில்வே மண்டலங்களில் நிலம் வழங்குவோருக்கு வேலை வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் ஆர்ஜேடி தலைவர் ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் உள்ளிட்ட12 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சிபிஐ முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியது
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து புதிதாக ஆட்சி அமைத்துள்ளார். நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் சிபிஐ ரெய்டு நடப்பதால், பெரும்பான்மை நிரூபிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாக். மீது தற்செயலாக ஏவுகணை வீச்சு… இந்திய விமானப்படை அதிகாரிகள் மூவர் டிஸ்மிஸ்!!
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்கள் எம்எல்சி சுனில் சிங், மாநிலங்களவை எம்.பி. ஆஷ்பக் கரீம, பியாஸ் அகமது, முன்னாள் எம்எல்சி சுபோத் ராய் ஆகியோர் இல்லங்களில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது.
சுனில் சுனில் சிங் கூறுகையில் “ சிபிஐ சோதனை என்பது 100 சதவீதம் உள்நோக்கம் கொண்டது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியாமல் என் வீட்டுக்குள் சிபிஐ நுழைந்து சோதனை நடத்துகிறார்கள். ஆவணத்தில் கையொப்பம் கேட்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்கள் தேவை. நிதிஷ்குமார், காங்கிரஸ்,ஆர்ஜேடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கூ கூட்டணிவசம் 160க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆதலால், பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது.
சிவசேனா, ஏக்நாத் ஷிண்டே வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆசித் நாத் திவாரி கூறுகையில் “ அதிகாரிகள், தங்கள் பதவியில் இருக்கும்போது, ஹிட்லரோ அல்லது முசோலினியோ அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேணடும். அமலாக்கப்பிரிவு அல்லது சிபிஐ ரெய்டு அனைத்தும் பாஜகவின் நலன்களுக்காகவே செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்