பெற்ற மகனையே எரித்துக் கொன்ற கொடூர தாய்... காணாமல் போய்விட்டதாக நாடகம்!

 
Published : Jan 19, 2018, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
பெற்ற மகனையே எரித்துக் கொன்ற கொடூர தாய்... காணாமல் போய்விட்டதாக நாடகம்!

சுருக்கம்

Kerala mother kills 14year-old son for poking fun at her

பெற்ற மகனையே எரித்துக் கொன்று விட்டு, அவன் காணாமல் போய்விட்டான் என்று நாடகமாடி போலீசில் புகார் செய்த தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஜித்து என்ற 14 வயது சிறுவன் காணாமல் போனதாக அவனது பெற்றோர் கொல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுவனின் தாயாரின் கையில் இருந்த தீக்காயத்தை கண்டு சந்தேகமடைந்த காவல் அதிகாரிகள், சிறுவனின் தாயாரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவரை பிரிந்து வாழும் இவரிடம் மகன் வளர்ந்துள்ளான். கடந்த சில நாட்களாக   தனது மகன், கணவன் வீட்டாரிடம் நெருங்கிப் பழகியதாகவும், இதனை பல முறை கண்டித்த தாகவும் ஆனால் அவன் கேட்கவில்லை என்றார்.

சம்பவத்தன்று தனது மகன், கணவரின் உறவினர் வீட்டுக்கு போவதாக கூறினான். இதனால் ஆத்திரமடைந்து அவனை கழுத்தை நெரித்து கொன்று, உடலை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்து விட்டதாக சிறுவனின் தாயாய் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். பெற்ற மகனையே தீயிட்டு கொளுத்தி கொன்ற தாயின் இந்த கொடூர செயலால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"