பெண்ணின் சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால் அதுவும் பலாத்காரம் தான்.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

Published : Apr 08, 2022, 11:25 AM IST
பெண்ணின் சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால் அதுவும் பலாத்காரம் தான்.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

சுருக்கம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதம் இன்றி உறவு கொண்டால் அது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதற்கு சமம் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த, 35 வயது இளைஞருக்கும், அவரது காதலிக்கும் நிச்ச யிக்கப்பட்ட திருமணம் நின்று போன நிலையில், அவரை காதலித்த பெண் பாலியல் புகார் அளித்தார்.இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.இதையடுத்து அந்த இளைஞர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், இருதரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதம் இன்றி உறவு கொண்டால் மட்டுமே, அது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதற்கு சமம் என்று உத்தரவிட்டுள்ளது. 

மேலும் குற்றவாளியும், பாதிக்கப்பட்ட பெண்ணும் 10 ஆண்டுகள் பழகி உள்ளனர். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் ஆன பின் தான், அவர்கள் பாலியல் உறவு வைத்துள்ளனர். இது ஆதாரப்பூர்வமக நிரூபிக்கப்பட்டுள்ளது.வரதட்சணை விவகாரத்தால் தான், குற்றவாளியின் பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. பாலியல் உறவு கொள்ளும் போது ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் குற்றவாளிக்கு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதம் இன்றி உறவு கொண்டால் மட்டுமே, அது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதற்கு சமம்.திருமணம் செய்து கொள்வதாக தவறான வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் பாலியல் உறவு நடந்ததா அல்லது உண்மைகளை மறைத்து பெண்ணின் ஒப்புதல் பெறப்பட்டதா என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது.எனவே, விசாரணை நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?