
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு
உலக வெப்பமயம் காரணமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் காடுகளை அழித்து கட்டிடங்கள் உருவாக்கப்படுகிறது. இதனால் வெப்பமானது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வீட்டுக்கு ஒரு மரம் வளப்போம் என்ற வாசகம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ரிக்ஷா தொழிலாளி தனது ரிக்ஷாவையே குளு குளு தோட்டமாக மாற்றியுள்ளார்.
ரிக்ஷாவையே தோட்டமாக மாற்றிய தொழிலாளி
அந்தவகையில் சமுக வலைதளங்கள் புதுமையான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதில் புதையலாக உள்ளது, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு சுவாரஸ்யமாக்குகிறார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது. அப்படிபட்ட ஒரு படத்தை தான் கிரீன் பெல்ட் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் இந்தியாவை சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி தனது ரிக்ஷாவின் மேல் புற்களை கொண்டு மேல் தளம் அமைத்துள்ளார். பசுமையாக மூடப்பட்டுள்ள அந்த ரிக்ஷாவின் பல இடங்களில் சிறிய அளவிலான பூந்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து இது போன்ற தற்காப்பு பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.