கேரள அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், பி ராஜீவ் தரக்குறைவாக விமர்சித்தமைக்கு அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், அவர்களின் அறியாமையை வெளிப்படுத்திவிட்டார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார்.
கேரள அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், பி ராஜீவ் தரக்குறைவாக விமர்சித்தமைக்கு அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், அவர்களின் அறியாமையை வெளிப்படுத்திவிட்டார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கும், ஆளுநர் முகமது ஆரிப் கானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
அதிகாரத்தில் ஆளுநர் மாளிகை பெரிதா அல்லது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசு பெரிதா என்ற வகையில் கேரள அமைச்சர்களும், ஆளுநர் முகமது ஆரிப் கானும் சளைக்காமல் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி! பொருளாதாரம் வளர மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை
இதில் உச்ச கட்டமாக சமீபத்தில் கேரள அமைச்சர் பாலகோபால் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ஆளுநரின் பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில் “ உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து பழகியவர்களால், வந்தவர்களால் ஜனநாயகம் மிகுந்த கேரளாவில் பல்கலைக்கழக செயல்பாடு குறித்து புரிந்து கொள்ள முடியாது.
பனாராஸ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களுக்கு கூட 50 முதல் 100 பேர் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இதுபோன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கேரள பல்கலைக்கழங்கள் செயல்பாட்டை புரிந்துகொள்வது கடினம்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பதவி ஏற்றார் மல்லிகார்ஜூன கார்கே
அது மட்டுமல்லாமல் மற்றொரு அமைச்சரான பி. ராஜீவ் பேசுகையில் “ ஆளுநரின் செயல்பாட்டை கேரள அரசு ஆய்வு செய்ய வேண்டும்”எனத் தெரிவி்த்திருந்தார்.
இந்த இரு அமைச்சர்களின் வரம்பு மீறிய பேச்சுக்கும் கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் பாலகோபால் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, அவரைஅமைச்சர் பதிவியிலிருந்து நீக்க முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் முகமது ஆரிப் கான் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் “ உ.பியில் உள்ள பனாராஸ் பல்கலைக்கழகம் குறித்து அமைச்சர் பாலகோபால் பேசியது என்பது கேரள மாநிலத்துக்கும், பிற மாநிலங்களுக்கும் இடையே மோதலை உருவாக்கும் முயற்சியாகும்.ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உயர்கல்விமுறை கடைபிடிக்கும்போது அது குறித்த தவறான தோற்றத்தை உருவாக்க அமைச்சர் முயல்கிறார். பாலகோபால் கருத்து தேச ஒற்றுமைக்கு மட்டுமல்லாது, ஒருமைப்பாட்டுக்கும் சவால் விடுப்பதாகும். நமது அரசியலமைப்பு சட்டம் ஆளுநர்கள் வெளிமாநிலத்திலிருந்து வருவதை அவசியமாக்குகிறது.
இந்தியாவுக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை.. ப.சிதம்பரம் & சசி தரூருக்கு எதிராக சீறிய காங்கிரஸ் கட்சி
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மத்தியப் பல்கலைக்கழகம். அது மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வராது. அந்த பல்கலைக்கழகத்தில் பிற மாநிலங்களில் இருந்து அதிக துணைவேந்தர்களைக் கொண்டுள்ளது என்பது பாலகோபால் அறியவில்லை. அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளை அறியதவராக அமைச்சர்கள் உள்ளனர். பதவிப்பிரமாணத்தின் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறிவிட்டார் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பை முதல்வரிடம் விடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
இதற்கிடையே கொச்சியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர்கள் பாலகோபால், ராஜீவ் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:
" ஆளுநர் குறித்து தரக்குறைவாக பேசியஅமைச்சர்கள் பாலகோபால், ராஜீவ் ஆகியரை நீக்குவது குறித்த முடிவை முதல்வர் பினராயி விஜயனிடம் விடுகிறேன். அமைச்சர்கள் பேசிய விதம், செயல்பாடு எனக்கு வேதனையை அளிக்கிறது.
என்னுடைய செயல்பாட்டை அரசு ஆய்வு செய்யும் எனசட்டத்துறை அமைச்சர் ராஜீவ் பேசியுள்ளார். இதன் மூலம் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் குறித்து அவர் அறிந்திருக்கவில்லை எனத் தெரிகிறது. என்னுடைய செயல்பாடுகளை நீதிமன்றம் மட்டும் ஆய்வுசெய்யும். ஆளுநரின் செயல்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்ய முடியாது.
மது மற்றும் லாட்டரியில் இருந்து மட்டுமே வருமானத்தை ஈட்டிவரும் நிதிஅமைச்சர், உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்தவர்களால், கேரள கல்வி முறையை அறியமுடியாது எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து பேசுவதை தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்துகிறேன். அசாம், மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களால் கேரள கல்வி முறையை அறியமுடியாதா. அவர்களுக்கு தொந்தவராக இருக்காதா
ஆளுநருக்கம், அவர்சார்ந்த அலுவலகத்துக்கும் அமைச்சர்கள் அவமரியாதை செய்கிறார்கள்.அரசியலமைப்புச் சட்டத்துக்கு பணிந்து நடப்பது ஒவ்வொருவரின் கடமை. அரசியலமைப்பை மதிக்காதவர்கள், ஆளுநரின் செயல்பாட்டை பேசுகிறார்கள். பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு அமைச்சர் பேசினார், அவர் நீக்கப்பட்டார், ஆனால் கட்சித் தலைமை ஏதும் கூறவில்லை. 100சதவீத கல்வியறிவு உள்ள இந்த மாநிலத்தின் வருமானம் மதுவிலும், லாட்டரியிலும்தான் வருவது வெட்கக்கேடு.”
இவ்வாறு ஆளுநர் ஆரிப் கான் தெரிவித்தார்