திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுதிறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
திருப்பதி கோவிலில் சிறப்பு முன்னூரிமை தரிசன டிக்கெட்டை இன்று முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் மாற்றுதிறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் தரிசன டிக்கெட் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க:இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி..? என்ன காரணம் தெரியுமா..?
அதன் படி இன்று முதல் ஆன்லைனில் சிறப்பு தரிசன டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். முதல் 1000 பேருக்கு இந்த டிக்கெட் வழங்கப்படும். தினமும் 3 மணி நேரம் ஏழுமலையானை தரிசக்க இவர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:திருப்பதியில் இந்த தினங்களில் அனைத்து தரிசனமும் ரத்து.. 12 மணி நேரம் கோவில் மூடல்.. என்ன காரணம் தெரியுமா..?