Kejriwal on Currency: ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி! பொருளாதாரம் வளர மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை

By Pothy RajFirst Published Oct 26, 2022, 1:09 PM IST
Highlights

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியம், அதற்கு கடவுளின் ஆசி அவசியம். அதனால் ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி படங்களை அச்சிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி நிறுவனரான அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை தெரிவித்துள்ளார்

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியம், அதற்கு கடவுளின் ஆசி அவசியம். அதனால் ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி படங்களை அச்சிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி நிறுவனரான அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை தெரிவித்துள்ளார்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

சத்தீஸ்கர் முதல்வருக்கு விழுந்த சவுக்கடி!! அடேங்கப்பா, பயங்கர அடி - வெளியான பகீர் காரணம்

இன்று நான் பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்திய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி படம் இருக்கும் போது மறுபுறம் கடவுள் விநாயகர் மற்றும் லட்சுமி படம் இருக்குமாறு புதிதாக அச்சிட வேண்டும்.

நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, நமக்கு அதிகமான முயற்சிகள் தேவை. அதற்கு கடவுளும், கடவுளின் ஆசியும் தேவை. கடவுளின் ஆசியும், கடவுளும் துணை இருந்தால், நம்முடைய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான செயலாக மாறும், நல்ல முடிவுகள் கிடைக்கும்

எனக்கு இந்த சிந்தனை எப்படி வந்ததென்றால், தீபாவளியன்று நான் பூஜை செய்தபோதுதான் இந்த யோசனை வந்தது. ரூபாய் நோட்டில் ஏன்கடவுள் லட்சுமி, விநாயகர் படம் அச்சிடக்கூடாது என யோசித்தேன்.

இந்தியாவுக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை.. ப.சிதம்பரம் & சசி தரூருக்கு எதிராக சீறிய காங்கிரஸ் கட்சி

ரூபாய் நோட்டில் கடவுளின் படம் அச்சிட்டால் மட்டும் பொருளாதாரம் மேம்படும் என்று சொல்லவில்லை. கடவுளின் படமும் தேவை என்று கூறுகிறேன்.ரூபாய் நோட்டில் கடவுள் விநாகர், லட்சுமி படம் அச்சிட்டால்  இந்த தேசத்து மக்கள் அனைவரும் ஆசிபெறுவார்கள்

இதற்காக மத்திய அரசு ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டாம். புதிதாக இனிமேல் அச்சடிக்கும் ரூபாய் நோடடுகளில் மட்டும் லட்சுமி, விநாயகர் படம் இருக்கட்டும். 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பதவி ஏற்றார் மல்லிகார்ஜூன கார்கே

இந்தோனேசியா முஸ்லிம் நாடுதான். அங்கு 85 சதவீத மக்கள் முஸ்லிம்கள், 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இந்துக்கள் உள்ளனர். ஆனால், அந்நாட்டின் ரூபாய் நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டிருக்கும். நாம் யாருக்கும் எதிராக பேசவோ, செயல்பட வேண்டாம். இந்த முயற்சி என்பது ஒவ்வொருவரின், தேசத்தின் வளர்ச்சிக்கான செயல்

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்

click me!