பள்ளி சுற்றுலாவுக்கு சென்ற மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஒருகாலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு தற்போது இளம் வயதினைரையும் அதிகமாக பாதித்து வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்பதே வேதனையான விஷயம். பள்ளிகளில் விளையாடும் போது அல்லது படிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்கோட்டில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பள்ளி சுற்றுலாவுக்கு சென்ற மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளர். இறந்த மாணவி. புலப்பட்டாவில் உள்ள எம்என்கேஎம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீ சயனா என்பது தெரியவந்துள்ளது. மூன்று பேருந்துகளில் 135 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் அடங்கிய 150 பேர் கொண்ட குழு மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நேற்றிரவு மைசூர் அரண்மனைக்குச் சென்று திரும்பியபோது, ஸ்ரீ சயனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறஹ்டு.. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மாணவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அந்த மாணவியின் மறைவையடுத்து, குழுவினர் தங்களது பயணத்தை நிறுத்திவிட்டு வீடு திரும்ப முடிவு செய்தனர். சுற்றுலா சென்ற இடத்தில் மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
காற்று மாசுபாடு மாரடைப்பை ஏற்படுத்துமா? இதயநோய் மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்?