kcr: brs:தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

By Pothy RajFirst Published Oct 5, 2022, 1:46 PM IST
Highlights

தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான  சந்திரசேகர் ராவ், தனது தேசிய கட்சியின் பெயரை இன்று அறிவித்தார். 

தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான  சந்திரசேகர் ராவ், தனது தேசிய கட்சியின் பெயரை இன்று அறிவித்தார். 

இதன்படி தனது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதற்கு “பாரதிய ராஷ்ட்ரிய சமிதி” என்று பெயர்மாற்றம் செய்துள்ளார்.

நாளை தேசிய கட்சி தொடங்குகிறார் சந்திரசேகர் ராவ்… மக்களுக்கு மதுபாட்டில் மற்றும் கோழி கொடுத்து அசத்தல்!!

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு்ள்ளார். இதற்காக பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் கட்சித் தலைவர்களைச் சந்தித்து சந்திரசேகர் ராவ் ஆதரவு திரட்டி வருகிறார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரைச் சந்தித்து சந்திரசேகர் ராவ் பேசியிருந்தார்.

புதிய நீதிபதிகள் நியமனம்: தலைமை நீதிபதி அனுப்பிய கடிதத்துக்கு கொலிஜியம் நீதிபதிகள் இருவர் எதிர்ப்பு

தேசிய அரசியல் நுழைவது குறித்தும், கட்சியின் பெயரை மாற்றுவது குறித்து தனது கட்சி நிர்வாகிகளிடம் சந்திரசேகர் ராவ் கடந்த ஜூலை முதலே பேசி வந்தார். இந்நிலையில் தசரா பண்டிகையின் விஜய தசமி நாளான இன்று தெலங்கானா முதல்வர் தனது தேசிய கட்சியின் பெயரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி முதல்வர் சந்திரசேகர் ராவ் , தனது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியை பாரதிய ராஷ்ட்ரிய சமிதி என்று மாற்றி, தேசிய கட்சியாக அறிவித்தார்.

இது குறித்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, “ தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 5-10-2022(இன்று) நடந்தது.

அவரு பாஜகவுக்காக வேலை பார்க்கிறாரு ! பிரசாந்த் கிஷோரை கலாய்த்த நிதிஷ் கட்சி

இந்தக் கூட்டத்தின் முடிவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற எங்கள் கட்சியின் பெயரை பாரதிய ராஷ்ட்ரிய சமிதி என்று மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டத்திலும் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்சியின் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், தீர்மானங்கள் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டது.

click me!