munnar tiger attack: 10 பசுக்களை கொன்ற புலி சிக்கியது ! மூணாறு வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது

By Pothy RajFirst Published Oct 5, 2022, 1:19 PM IST
Highlights

மூணாறு நயமக்காடு எஸ்டேட் பகுதியில் 10 பசுக்களை அடித்துக்கொன்ற புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

மூணாறு நயமக்காடு எஸ்டேட் பகுதியில் 10 பசுக்களை அடித்துக்கொன்ற புலி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. 

மூணாறு அருகே, கேடிஎச்பி நிறுவனத்துக்கு சொந்தமான நயமக்காடு எஸ்டேட் பகுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மாட்டுக்கொட்டகையில் 10க்கும் மேற்பட்டபசுக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த வாரம் இந்தப் பகுதிக்கு வந்த புலி ஒன்று பசுக்களை அடித்துக் கொன்றது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிகாலை வேலைக்குச் செல்வதை நோட்டமிட்ட புலி அதன்பின் வந்து பசுக்களை அடித்துக் கொன்றது. இதுவரை 10  பசுக்கள் வரை புலி கொன்றுவிட்டதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். 

பசுக்களை கொன்ற புலி குறித்து பலமுறை வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் அந்த புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மூணாறு-உடுமலைப்பேட்டை சாலையில் நேற்று தொழிலாளர்கள் மறியல்செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

10 பசுக்களை அடித்துக் கொன்ற புலி: மூணாறு மக்கள் பீதி: கூண்டு வைத்து காத்திருக்கும் வனத்துறை

இதையடுத்து, அதிகாரிகள் தலையிட்டு பேச்சு நடத்தி, புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன்பின்பு, தொழிலாளர்கள் மறியல் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர். 
புலியைப் பிடிக்க வனத்துறையினர் 3 இடங்களில் கூண்டு வைத்தனர். புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உயரமான இடங்களில் வனக் காவலர்களையும், ட்ரோன்களையும் வனத்துறையினர் பயன்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று இரவு நயமக்காடு பகுதியிலிருந்து ரவிகுள் நோக்கி புலி இடம் பெயர்ந்தது.அப்போது, இரவு 8.30 மணி அளவில் அப்பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டுக்குள் இருந்த இறைச்சியை சாப்பிட புலி சென்றபோது கூண்டில் சிக்கியது

வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியதை அறிந்த நயமக்காடு குடியுருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர். 

இமாச்சலில் நாளை நடக்கும் தசரா பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்பு

மூணாறுவனப மண்டலம் மற்றும் மண்டல வனப்பாதுகாப்பு அதிகாரி ராஜூ பிரான்சிஸ் கூறுகையில் “ புலியை வனப்பகுதிக்குள் விடுவதா அல்லது கூண்டுக்குள் சிறிது காலம் பாதுகாப்பாக வைத்திருப்பதா என்பது குறித்து தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் 6 பேர் கொண்ட குழு முடிவு எடுக்கும்.

இந்தக் குழு தனது அறிக்கையை தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரியிடம் அளித்தபின் முடிவு எடுக்கப்படும். கூண்டில் சிக்கிய புலி, பசுக்களை கொன்றதா என அடையாளம் காணவில்லை. வீடியோவில் இருந்த புலியின் உடலில் உள்ள கோடுகளும், கூண்டில் சிக்கிய புலியின் உடலில் உள்ள கோடுகளையும் ஒப்பிட்டுப்பார்த்து கணக்கிடப்படும்.

புலி உடலில் உள்ள வரிகள், ஒவ்வொரு புலிக்கும் மாறுபடும். புலியின் கால்தடம் ஆகியவை ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளது அவற்றை வைத்து கண்டுபிடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்

பிரதமர் நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களிடம் ‘ஒழுக்கச் சான்று’! யுடர்ன் அடித்த இமாச்சல் போலீஸார்
வனத்துறை கூண்டில் சிக்கிய புலிக்கு 7 வயது இருக்கும். இதுவரை மனிதர்கள் யாரையும் அந்தப் புலி கொல்லவில்லை. மனிதர்கள் வசிப்பிடங்களில் உள்ள கால்நடைகளை மட்டுமே அந்த புலி அடித்துக் கொன்றுள்ளது.

click me!