
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் தெலங்கானா முதல்வர் மகள் கவிதா.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், எம்.எல்.சியுமான கவிதா அமலாக்கத்துறை முன் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
இதையும் படிங்க..ரியல் No.1 இவர்தான்.. நடிகர் விஜயை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்.! எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
அமலாக்கத்துறை கவிதாவை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக அவரது கட்சி நேற்று குற்றம் சாட்டியதோடு இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியிருந்தந்த நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
கவிதாவின் சகோதரரும் பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் மூத்த தலைவருமான கே.டி. ராமாராவும் அங்கு வந்துள்ளார். ஏராளமான கட்சித் தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்