மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல்... டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி!!

Published : Mar 10, 2023, 09:23 PM IST
மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல்... டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி!!

சுருக்கம்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த பிப்.26 ஆம் தேதி கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மார்ச்.20 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஓயோ நிறுவனரின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு... விபத்து குறித்து போலீஸார் விசாரணை!!

இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் அவர் மீது தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் சிபிஐ வழக்கில் மணீஷ் சிசோடியா விசாரணைக்கு பிறகு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. இந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை கைது செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

இதையும் படிங்க: ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய நபர்... தெலுங்கானாவில் நிகழ்ந்த விநோத திருமணம்!!

அப்போது அவரிடம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச்.21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!