Karnataka Elections 2023: இவர்தான் உங்க நட்சத்திர தலைவரா? காங்கிரஸை விளாசும் பாஜக

By SG BalanFirst Published Apr 20, 2023, 12:55 PM IST
Highlights

சமீபத்தில் கொல்லப்பட்ட தாதாக்கள் ஆதிக் மற்றும் அஷ்ரப் ஆகியோருடன் நண்பராக இருந்த இம்ரான் பிரதாப்காரியை நட்சத்திரப் தலைவர்களில் ஒருவராக குறிப்பிட்டதற்காக காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக சாடுகிறது.

கர்நாடக மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திர தலைவர்களில் ஒருவராக இம்ரான் பிரதாப்காரியின் பெயர் இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டு பாஜக காங்கிரஸை கடுமையாகச் சாடியுள்ளது.

இதுபற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட பாஜக எம்பி ஷோபா கரந்த்லாஜே, "பிரதாப்காரி சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ரவுடிகளான ஆதிக் மற்றும் அஷ்ரப் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். அவர் அவர்களை 'சகோதரர்கள்' என்று அழைத்து வந்தார்" என்றார். பிரதாப்காரி அவர்கள் இருவரையும் குருவாகக் கருதினார் எனவும் குற்றம்சாட்டிய ஷோபா, காங்கிரஸ் கட்சி 'குற்றவாளிகள்' மற்றும் 'தேச விரோதிகளை' ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

தேஜஸ்வி சூர்யாவை ஓரம் கட்டுகிறதா பாஜக? ஸ்டார் லிஸ்டில் இடம்பெறாதது ஏன்?

மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலை காங்கிரஸ் புதன்கிழமை வெளியிட்டது. இந்த பட்டியலில் மொத்தம் 40 பேர் கர்நாடக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இந்தப் பட்டியலில் பிரியங்கா காந்தி, கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, கர்நாடகாவின் ஏஐசிசி பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல்வர்கள் பூபேஷ் பாகேல் மற்றும் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். இருப்பினும், 2018 கர்நாடக தேர்தலுக்கான நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் இருந்த ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிஹோலி, டி.கே.சுரேஷ், ஜி.சி.சந்திரசேகர், சையத் நசீர் ஹுசைன், ஜமீர் அகமது கான், எச்.எம். ரேவண்ணா, உமாஸ்ரீ, ரேவந்த் ரெட்டி, ரமேஷ் சென்னிதலா, ஸ்ரீனிவாஸ் பி.வி., ராஜ் பப்பர், முகமது அசாருதீன், திவ்யா ஸ்பந்தனா, இம்ரான் பிரதாப்கர், ருபா கன்ஹாப்கர் சசிதர், சாதுகோகிலா ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சூரத் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாஜகவும் தங்கள் 40 நட்சத்திரத் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் பேரணிகளிலும் பங்கேற்றுப் பேசுகிறார். பெங்களூருவில் அவர் 10 கிமீ தூரத்துக்கு ரோடு ஷோ நடத்துகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்சிகளின் தேதி மற்றும் இடம் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், சிருங்கேரி, பெங்களூரு, பேளூர், ஹூப்ளி, முல்கி-மோடுபிடிரே ஆகிய இடங்களில் அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூருவில் தொடங்கி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பிரஹ்லாத் ஜோஷி, ஸ்மிருதி இரானி, ஆகியோரும் ஸ்டார் தலைவர்கள் பட்டியலில் உள்ளனர்.

ஸ்டார் தலைவர்களை களமிறக்கும் பாஜக! அனல் பறக்கும் கர்நாடக தேர்தல் பிரச்சாரம்!

click me!