Santro Ravi Arrested:11 நாட்கள் தலைமறைவு! ‘சான்ட்ரோ’ ரவியை குஜராத்தில் கைது செய்தது கர்நாடக போலீஸார்

By Pothy Raj  |  First Published Jan 14, 2023, 10:07 AM IST

கர்நாடக மாநிலத்தில் பாலியல் வழக்கு, வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சான்ட்ரோ ரவி எனப்படும் கேஎஸ் மஞ்சுநாத்தை 11 நாட்கள் தலைமறைவுக்குப்பின் குஜராத்தில் நேற்று கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.


கர்நாடக மாநிலத்தில் பாலியல் வழக்கு, வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சான்ட்ரோ ரவி எனப்படும் கேஎஸ் மஞ்சுநாத்தை 11 நாட்கள் தலைமறைவுக்குப்பின் குஜராத்தில் நேற்று கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.

ஒயிட்காலர் குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டுவரும் கே.எஸ்.மஞ்சுநாத் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர். இவர் மீது விபச்சார வழக்குகள், கடத்தல், பாலியல் வழக்குகள் என ஏராளமான வழக்குள் நிலுவகையில் உள்ளன. 

Tap to resize

Latest Videos

கர்நாடக சட்டம்ஒழுங்கு ஏடிஜிபி அலோக் குமார் கூறுகையில் “ கர்நாடக மாநிலத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சான்ட்ரோ ரவி கடந்த 11 நாட்களாக தலைமறைவாகஇருந்தநிலையில் நேற்று குஜராத்தின் அகமதாபாத் நகரில் கைது செய்யப்பட்டார்.அவரை டிரான்சிஸ்ட் வாரண்ட் மூலம் கர்நாடக கொண்டுவர போலீஸார் ஈடுபட்டுள்ளனர்”எ னத் தெரிவித்தார்

மனைவி புகார்

சான்ட்ரோ ரவி மீது அவரின் மனைவி அளித்த புகாரால்தான் கடந்த 10 நாட்களாக ரவியின் பெயர் நாளேட்டில் பரபரப்பாக எழுந்துள்ளது. ரவியின் மனைவி மைசூரைச் சேர்ந்த தொண்டுநிறுவனத்தின் உதவியின் மூலம் இவர் மீது போலீஸில் புகார் அளி்த்துள்ளார்.

எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் டிக்கெட் விலை தெரியுமா? அறிந்திராத புதிய அம்சங்கள் விவரம்

அவர்அளித்த புகாரில் “ சான்ட்ரோ ரவியிடம் வேலை கேட்டு செல்லும்போது, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து, வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொண்டார் ரவி. அது மட்டும்லாமல் தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டினார். ஒரு கட்டத்தில் நான் ரவியை எதிர்க்கவே, போலீஸில் பொய்யான புகார் அளித்து என்னை சிறையில் அடைத்தார்.

அரசியல் புரோக்கர், சட்டவிரோ செயல்கள்

அதன்பின் தனியார் தொண்டுநிறுவனத்தின் உதவியின் மூலம் சிறையில் பிணை பெற்றுவெளியே வந்தேன். சான்ட்ரோ ரவி எனக்கு செய்த கொடுமைகள் அனைத்தையும் ஆதாரத்துடன், போலீஸுக்கு தெரிவித்து புகார் அளித்தேன். அது மட்டுமல்லாமல் ஏராளமான போலீஸ் அதிகாரிகளுக்கு ரவி உதவி செய்தது, பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருந்து சட்டவிரோ செயல்களில் ஈடுபட்டது குறித்த ஆதாரங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

சான்ட்ரோ ரவி மீது விபச்சாரம் தொடர்பாக 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன, இது தவிர ஆட்கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு நிலுவையில் இருந்ததால், அவர் மீது கடந்த 2005ம் ஆண்டு குண்டர் சட்டம் பாய்ந்து கைது செய்யப்பட்டார். 

பாஜக தலைவர் நுபர் ஷர்மாவுக்கு துப்பாக்கி லைசன்ஸ் ! பாலியல், கொலை மிரட்டல் எதிரொலி

தனிப்படை அமைப்பு

இதையடுத்து, சான்ட்ரோ ரவியைப் பிடிக்க தனிப்படை மைசூரு நகர்புற காவல் ஆணையர் பி ரமேஷ் மற்றும் 3 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உதவியுடன், 19 போலீஸ் அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டனர். இதில் இரு ஏசிபி அதிகாரிகள், 11 காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் இருந்தனர். இந்த படையினர் கடந்த 11 நாட்களா தீவிரமாகத் தேடி வந்தனர்.

எப்படித் தப்பினார்

ஆனால், போலீஸார் கண்களில் மண்ணைத் தூவி பல்வேறு இடங்களில் மறைந்து ரவி சுற்றித் திரிந்தார். ஏராளமான சிம்கார்டுகள், செல்போன்கள், வாகனங்கள் வைத்திருப்பதால், அடிக்கடி தன் இருப்பிடத்தையும், செல்போன் எண்ணையும் ரவி மாற்றிக்கொண்டே இடம் விட்டு இடம் பெயர்ந்தார்.

கர்நாடகத்தின் மாண்டியாவில் இருந்து கேரளாவுக்கு தப்பிய ரவி, அங்கிருந்து புனே சென்றார். அங்கிருந்து போலீஸாருக்குப் பயந்து மகாராஷ்டிரா எல்லை வழியாக குஜராத்துக்குள் ரவி நுழைந்தார். ரவியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்த கர்நாடக போலீஸார், அகமதாபாத்தில் பதுங்கி இருந்தபோது சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ல் தொடக்கம்: 66 நாட்கள் நடக்கிறது

சான்ட்ரோ ரவிக்கு வழுக்கைத் தலையாகும். எப்போது வெளியே புறப்பட்டாலும் விக் முடி இல்லாமல் இருக்கமாட்டார், மீசையும் பெரிதாக வைத்திருப்பார்.ஆனால், போலீஸார் கண்களில் மண்ணைத் தூவும் பொருட்டு தனது அடையாளத்தை ரவி மாற்றிக்கொண்டார். தலையை மொட்டையடித்து, மீசையை மழித்து அடையாளத்தை மாற்றியதால் போலீஸாரால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, போலீஸார் நெட்வொர்க் டம்பிங் தொழில்நுட்பம் மூலம், ரவியின் கண்காணித்து இருப்பிடத்தை ராய்ச்சூர் எஸ்பி உதவியின் மூலம் கண்டுபிடித்தனர்.

சான்ட்ரோ ரவிக்கு துணையாக இருந்த, ராம் ஜி என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். சான்ட்ரோ  ரவி மீது ஐபிசி 506, 498(ஏ), 504, 376, 270,313, 323, டிபி ஆக்ட்டில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

click me!