விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியரை பணிநீக்கம் செய்தது அமெரிக்க நிறுவனம்.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவிற்கு வந்துகொண்டு இருந்த விமானத்தில் மதுபோதையில் இருந்த சங்கர் மிஸ்ரா என்பவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பயணி இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தினரிடம் புகார் அளித்தார். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஏர் இந்தியா இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிங்க..Pongal 2023: வாடிவாசலில் சீற தயாராகும் காளைகள்! ஜல்லிக்கட்டு போட்டி எந்தெந்த தேதிகளில் எங்கு நடக்கிறது?
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ராவை கைது செய்தனர். மேலும், அவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே, இந்த சம்பவத்தை விமான ஊழியர்கள் சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காததற்கு மன்னிப்பு கேட்டுகொள்வதாக ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.ஒரு விமானி மற்றும் விமானத்திலிருந்த 4 பணியாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..நாட்டு நாட்டு பாட்டுக்கு இவங்க ஆடியிருக்காங்களா.? ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா - வைரல் வீடியோ!
இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சங்கர் மிஸ்ரா. அப்போது தன் மீதான குற்றத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அப்போது பேசிய அவர், நான் அந்தப் பெண் பயணி மீது சிறுநீர் கழிக்கவில்லை. அவரே அவர் மீது சிறுநீர் கழித்திருப்பார். அந்தப் பெண்ணுக்கு 70 வயது ஆகிறது.
சிறுநீர் பை தொடர்பான பிரச்சினையும் அவருக்கு இருக்கிறது. எனவே அவர்தான் சிறுநீர் கழித்திருக்கிறார். நான் சிறுநீர் இருந்திருந்தால் அவரது பக்கத்தில் இருந்த பயணி மீதும் அது பட்டிருக்கும். அந்த பயணியும் புகார் அளித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?