ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து லாரியில் மோதி 10 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்

By Raghupati RFirst Published Jan 13, 2023, 4:02 PM IST
Highlights

மகாராஷ்டிர மாநில நெடுஞ்சாலையில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவில் நாசிக் - ஷிர்டி நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவின் நாசிக் - ஷிர்டி நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 34க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பத்தரே கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த 10 பேரில், ஐந்து பேர் பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் என்றும், காயமடைந்த 34 பேர் நாசிக் மாவட்ட மருத்துவமனை, ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் சின்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நாசிக்-ஷீரடி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை மட்டுமல்ல, பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!

click me!