நாட்டு நாட்டு பாட்டுக்கு இவங்க ஆடியிருக்காங்களா.? ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா - வைரல் வீடியோ!

By Raghupati R  |  First Published Jan 13, 2023, 5:09 PM IST

தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா தற்போது வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தியாவின் மிக முக்கிய தொழில் அதிபர்களில் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். வாகன தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உலக அளவிலும் பிரபலமான நிறுவனமாக இருக்கும் மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் செல்லோ ஷோ தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது.  இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி.

ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படமும், சிறந்த பாடல் பிரிவில்  'நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதைத் தட்டிச் சென்றுள்ளது.

இதற்கு ஆனந்த் மஹிந்திராவும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

No one is immune from the catchiness of . Not even inhabitants of the past..😄 L&H may not have the same energy as the duo but they’re not bad! Enjoy the pic.twitter.com/9tMSfAKux5

— anand mahindra (@anandmahindra)

அதில், யாரும் மறக்க முடியாத நகைச்சுவை ஜோடியான லாரல் மற்றும் ஹார்டி ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டுப் பாடலுக்கு நடனமாடுவதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ள மஹிந்திரா, லாரலும் ஹார்டியும் கூட நாட்டு நாட்டு நாட்டு பாடலை எதிர்க்க முடியாது என்று கூறி பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!

இதையும் படிங்க..தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யணும்.. ஆளுநருக்கு பாதுகாப்பே இல்லை! இவரே இப்படி சொல்லிட்டாரு.!!

click me!