
இமாச்சலப்பிரதேசத்தில் இன்று காலை 5.17 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சேத பெரிதாக இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய நிலவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தர்மசலாவில் இருந்து 22 கி.மீ கிழக்கே, , மையமாக வைத்து பூமிக்கு கீழ் 5.கி.மீ ஆழத்தில் இன்று அதிகாலை 5.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.2 என்று ரிக்டர் அளவில் பதிவானது. சேதங்கள் ஏதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் ஜோஷிமத்தில் இருந்து 200கி.மீ தொலைவில் இருக்கும் உத்தரகாசியில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 2.9 என்று ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.
கடந்த 6ம் தேதி, ஜம்முகாஷ்மீரை மையமாக வைத்து 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மண்டலத்தை மையமாக வைத்து, பூமிக்கு கீழே 200கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலவியல்மையம் தெரிவித்தது. இந்த நிலஅதிர்வு டெல்லி என்சிஆர்வரை உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது