Anand Singh: பணம், தங்கக் காசு! கவுன்சிலர்களுக்கு 'காஸ்ட்லி கிப்ட்' கொடுத்த கர்நாடக அமைச்சரால் சர்ச்சை

By Pothy RajFirst Published Oct 25, 2022, 1:48 PM IST
Highlights

தீபாவளிப் பரிசாக கவுன்சிலர்களுக்கு ரொக்கப்பணம், தங்கக் காசு, வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாரி வழங்கிய கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் செயல் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

தீபாவளிப் பரிசாக கவுன்சிலர்களுக்கு ரொக்கப்பணம், தங்கக் காசு, வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாரி வழங்கிய கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் செயல் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

கிராமங்களில் உள்ள கவுன்சிலர்கள், நகராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்கள் என தனித்தனியாக இரு பரிசுகளை அமைச்சர் ஆனந்த் சிங் வழங்கியுள்ளார்.

வாட்ஸ்அப் சேவை திடீர் முடக்கம்! பயனாளிகள் பெரும் அவதி!

ஒரு பரிசுப் பெட்டியில் ரூ.ஒரு லட்சம் ரொக்கம், 144 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, உலர்பழங்கள் ஆகியவை அடங்கி இருந்தன. மற்றொரு பெட்டியிலும் இதேபோன்ற விலை மதிப்பிலான பொருட்கள் அடங்கி இருந்தன.  

கர்நாடக மாநிலத்தில் ஹெசபேட் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக ஆனந்த் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் தொகுதியில் 35 வார்டு கவுன்சிலர்களைக் கொண்ட ஒரு மாநகராட்சியும், 182 உறுப்பினர்களைக் கொண்ட 10 கிராம பஞ்சாயத்தும் உள்ளன.

மன்மோகன் சிங்கை பிரதமராகவே நீங்கள் கருதவில்லை! சிதம்பரம், சசி தரூருக்கு பாஜக பதிலடி

அனைத்து வார்டு கவுன்சிலர்களையும் லட்சுமி பூஜையன்று வீட்டுக்கு வரவழைத்த அமைச்சர் ஆனந்த் சிங், தனித்தனியாக பரிசுப் பெட்டியை வழங்கியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, இப்போதிருந்தே வார்டு கவுன்சிலர்களை தக்கவைக்க வேண்டும், ஆதரவைத் திரட்ட வேண்டும் என்பதற்காக இந்த தீபாவளிப் பரிசை அமைச்சர் ஆனந்த்சிங் தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

இது குறித்து பரிசுகளைப் பெற்ற வார்டு கவுன்சிலர்களிடம் நிருபர்கள் கேட்டபோது, அமைச்சர் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஆதரவாளர்களுக்கு பரிசுகள் கொடுப்பது வழக்கம் அவ்வாறு இந்த ஆண்டும் வழங்கினார். புதிதாக ஏதும் இல்லை எனத் தெரிவித்தனர்.

இன்று சூரியகிரகணம்: எத்தனை மணிக்கு தொடக்கம்? தமிழகத்தில் தெரியுமா, எங்கெங்கு தெரியும்?

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஆனந்த் சிங்கிடம் நிருபர்கள் கேட்க முயன்றபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

கர்நாடக மாநிலத்தில் 2023ம் ஆண்டு மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைத்தது. 

ஆனால், இந்த ஆட்சி ஓர் ஆண்டு மட்டுமே நீடித்தது. மதர்ச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும், காங்கிரஸ் இடையே ஏற்பட்ட  பிளவால், ஆட்சி கவிழ்ந்தது, மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த முறை போன்று இந்ததேர்தலில் ஆகிவிடக்கூடாது, பெரும்பான்மை பெற வேண்டும் என்ற தீவிரத்தோடு பாஜக வியுகங்களை வகுத்து வருகிறது

click me!