Is Whatsapp down: வாட்ஸ்அப் சேவை திடீர் முடக்கம்! பயனாளிகள் பெரும் அவதி! Meta என்ன சொல்கிறது?

By Pothy Raj  |  First Published Oct 25, 2022, 1:10 PM IST

வாட்ஸ்அப் சேவை கடந்த 30 நிமிடங்களாக முடங்கியுள்ளது. பயனாளிகள் எந்தவிதமான செய்தியையும் அனுப்பவோ அல்லது பெறவோ முடியவில்லை என்பதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


வாட்ஸ்அப் சேவை கடந்த 30 நிமிடங்களாக முடங்கியுள்ளது. பயனாளிகள் எந்தவிதமான செய்தியையும் அனுப்பவோ அல்லது பெறவோ முடியவில்லை என்பதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

பயனாளிகளால் வாட்ஸ்அப் செயலியை திறக்க முடியவில்லை. அவ்வாறு செயலி ஓபன் ஆகினாலும், அதிலிருந்து எந்தவிதமான மெசேஜையும், வீடியோ, படங்களையும் அனுப்பவோ அல்லது  பெறவோ முடியவில்லை.

Tap to resize

Latest Videos

வாட்ஸ்அப் சேவை முடங்கியது குறித்தும், எப்போது சரி செய்யப்படும் என்பது குறித்தும் மெடா நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

டவுன்டிடெக்டர் இணையதளம் கூறுகையில் “ வாட்ஸ்அப் சேவை திடீரென முடங்கியதள்ளது, பல்வேறு மண்டலங்களிலும் வாட்ஸ்அப் சேவையை பயனாளிகள் பெற முடியவில்லை. மும்பை, கொல்கத்தா, டெல்லி, லக்னோ உள்ளிட்ட பல நகரங்களில் வாட்ஸ்அப் இயங்கவில்லை”எனத் தெரிவித்துள்ளது

 

People Coming to Twitter to see if WhatsApp is down pic.twitter.com/eGi25KiQhU

— Bella Ciao (Chai) (@punjabiii_munda)

 வாட்ஸ்அப் சேவை முடங்கியதையடுத்து, பயனாளிகள் ட்விட்டரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதைக் கிண்டல் செய்து டிவிட்டரில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகின்றன. 

 

People coming to twitter after 😭😂 pic.twitter.com/kt1tZRDMbQ

— Aritra ❤️ (@Aritra05073362)

ஒருவர் மிகவும் நகைச்சுவையாக, வாட்ஸ்அப் சர்வர் முடக்கத்தால் ட்விட்டருக்கு மக்கள் வருகிறார்கள் என்பதை வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். 

வாட்ஸ்அப் தாய் நிறுவனமான, மெட்டா நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ வாட்ஸ்அப் மூலம் செய்திகள்,வீடியோக்கள்,  புகைப்படங்களை அனுப்புமுடியாமல் சிரமங்களைச் சந்திப்பதாக தகவல் அறிந்தோம். வாட்ஸ்அப் சேவையை இயல்புக்கு கொண்டுவர முயன்று வருகிறோம். விரைவாக குறைபாடுகளை சரிசெய்துவிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

டவுன்டிடெக்டர் இணையதளத்தின்படி, “ வாட்ஸ்அப் பயனாளிகளில் 70 சதவீதம் பேருக்கு செய்திகளை அனுப்புவதில் சிரமமும், 24 சதவீதம் பேருக்கு வாட்ஸ் அப் இணைவதில் சிரமங்களும், 7 சதவீதம் பேருக்கு சர்வர் இணைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது

 

click me!