Karnataka Elections: கர்நாடகாவில் வாக்களிக்க வந்த 2 பேர் மாரடைப்பால் மரணம்

By SG Balan  |  First Published May 10, 2023, 1:26 PM IST

ஹாசன் மற்றும் பெல்காம் மாவட்டங்களில் வாக்களிக்க வந்த இரண்டு பேர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இன்று காலை வாக்களித்துவிட்டு வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஹாசன் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் பெயர் ஜெயண்ணா என்றும் அவருக்கு வயது 49 எனவும் தெரியவந்துள்ளது. ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவில் உள்ள சிக்கோல் கிராமத்தில் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 3, 4 நாட்களாக அரசியல் கட்சியிடனருடன் பிரச்சாரத்தில் பங்கெடுத்திருந்த ஜெயண்ணா, காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

Tap to resize

Latest Videos

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை கண்டறிவது எப்படி?

வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும், வாக்குச் சாவடிக்கு வெளியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்துவிட்டார். சம்பவ இடத்திலேயே அவரது உயர் பிரிந்துவிட்டது. மாரடைப்பால் ஜெயண்ணா இறந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல பெல்காம் மாவட்டத்திலும் பவுர்வா என்ற மூதாட்டி ஒருவரும் வாக்களிக்கச் சென்றபோது வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

Karnataka Election 2023 LIVE Updates: கர்நாடகாவில் 1 மணி வரை 44.16 சதவீதம் வாக்குப்பதிவு

click me!