Breaking: ஹெலிகாப்டர் மீது மோதிய கழுகு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார்!!

By Dhanalakshmi G  |  First Published May 2, 2023, 1:21 PM IST

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டரின் மீது கழுகு மோதியதில் கண்ணாடிகள் உடைந்தன.


கர்நாடக மாநிலம் ஜக்குரு விமான நிலையத்தில் இருந்து கோலராவின் முளுபாகிலுவுக்கு காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் சென்ற ஹெலிகாப்டர் மீது கழுகு மோதியது. இதில் கண்ணாடிகள் உடைந்து பத்திரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிவகுமார் தப்பினார்.

கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக டி கே சிவக்குமார் பெங்களூருவில் இருந்து முல்பாகல் நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் சிவகுமாருடன் இருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

Latest Videos

முஸ்லிம்களை திருப்திபடுத்த பஜ்ரங் தளத்துக்குத் தடையா? காங். அறிவிப்பு குறித்து அசாம் முதல்வர் சீற்றம்

கர்நாடகாவில் தேர்தல் நடக்கவிருப்பதால் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு விமானத்தில், ஹெலிகாப்டரில், காரில் என்று பேட்டி அளித்து வருகின்றனர். இதுபோன்றுதான் இன்று சிவகுமாரும் கன்னடா சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கழுகு தாக்கியதில் ஹெலிகாப்டர் கண்ணாடி சுக்கு நூறாக சிதறியது. சுதாரித்துக் கொண்ட பைலட் ஹெலிகாப்டரை பெங்களூருவில் இருக்கும் ஹெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரூ.830 கோடி செலவு.. ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

click me!