இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 - நாங்க தருவோம்.. எல்லாமே சும்மா.! கர்நாடகா தேர்தல் பரபர

By Raghupati R  |  First Published Mar 10, 2023, 7:53 AM IST

நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 65 இடங்களை தாண்டாது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


கர்நாடகாவில் பசவராஜ் தலைமையிலான பாஜக அரசு இந்த ஆண்டு இறுதியில் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் 65 இடங்களுக்கு மேல் வெற்றிபெற முடியாது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் தற்போது நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழலில், பாஜகவும், காங்கிரசும் போட்டி போட்டு களத்தில் குதித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ எங்கள் எண்ணிக்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாஜக 65 இடங்களுக்கு மேல் பெறாது என்பது எங்களுக்குத் தெரியும். எனது தகவலின்படி அவை 40 இடங்களுக்கு குறையும்.

விவசாயிகள் உட்பட அனைத்து மக்களும் அதையே கூறுகின்றனர். நாங்கள் கிட்டத்தட்ட 75% இட ஒதுக்கீடு பற்றி ஆலோசித்துள்ளோம். அனைத்து இடங்களிலும் விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார். அதேபோல கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அண்மையில் அளித்த பேட்டியில், “கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்றும், தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க..இப்போ அடுத்த 13 பேர் எஸ்கேப்.! கட்சி தாவும் நிர்வாகிகள்.. காலியாகும் பாஜக கூடாரம் - அப்செட்டில் அண்ணாமலை

தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த பசவராஜ் பொம்மை, தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால் அவர்களின் சாதனை மோசமாக இருப்பதால் வெற்றி பெறாது என்றும், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் சமுதாயத்தை பிளவுபடுத்தியது.  

குறிப்பாக எஸ்சி / எஸ்டியினருக்கு எதுவும் செய்யவில்லை.அதனால்தான் ஆட்சியில் இல்லை.இப்போது எவ்வளவோ முயற்சி செய்து நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000 தருவதாகச் சொல்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் துடிக்கிறது என்பதையே இது காட்டுகிறது. அதனால்தான் அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க..பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு ‘அந்த’ தொல்லை கொடுத்த பிரியங்கா காந்தியின் பிஏ.. வைரலாகும் வீடியோ !!

இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்

click me!