கபடி விளையாடிய போது திடீர் மாரடைப்பு.. சுருண்டு விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவன்..

Published : Mar 09, 2023, 02:15 PM ISTUpdated : Mar 09, 2023, 02:19 PM IST
கபடி விளையாடிய போது திடீர் மாரடைப்பு.. சுருண்டு விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவன்..

சுருக்கம்

கடந்த சில நாட்களாகவே மாரடைப்பால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கபடி விளையாடி கொண்டு இருந்த போது கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த சில நாட்களாகவே மாரடைப்பால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் மடகசிரா பகுதியைச் சேர்ந்த தனுஜ் குமார் நாயக் (18). இவர் தனியார் கல்லூரியில் பி.பார்மசி படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தனுஜ் நாயக் கபடி விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென சுருண்டு விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

 

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தனுஷ் நாயக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில்;- கபடி விளையாடிய போது தனுஷ் நாயக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!