டெல்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
டெல்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள விஜய் பூங்காவில் கட்டிடம் ஒன்று புதன்கிழமை இடிந்து விழுந்தது. காவல்துறை அதிகாரிகள் அளிக்கும் தகவலின்படி, கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது.
“கட்டிடம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் இந்த பாதிப்பும் ஏற்பட்டவில்லை. இடிந்து விழுந்த கட்டிடம் 25 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் பாதுகாப்பற்றதாக இருந்ததால் சில காலங்களுக்கு முன்பே கைவிடப்பட்டுவிட்டது. நான்கு அடுக்குகள் கொண்ட அந்தக் கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
Varkala Paragliding: அந்தரத்தில் மாட்டிக்கொண்ட இளம்பெண்! பாராகிளைடிங் செய்தபோது நேர்ந்த விபரீதம்!
दिल्ली के विजय पार्क इलाके में पांच मंजिला मकान भरभरा गिर गया. इस हादसे में किसी के हताहत होने की सूचना नहीं है. वहीं हादसे की सूचना मिलते ही पुलिस और दमकल की गाड़ियां मौके पर पहुंच गईं. pic.twitter.com/cfYtTjLETf
— Rohit... (@rohit_balhara24)அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகும் காட்சியை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
சென்ற மார்ச் 1ஆம் தேதி, வடக்கு டெல்லியின் ரோஷனாரா சாலையில் தீப்பிடித்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
Heart Attack Deaths: தெலுங்கானாவில் போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் மரணம்!