Heart Attack Deaths: தெலுங்கானாவில் போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் மரணம்!

By SG Balan  |  First Published Mar 8, 2023, 6:16 PM IST

தெலுங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில் 5 நாட்களில் 4 பேர் மாரடைப்பால் இறந்துள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


தெலுங்கானாவில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்நகர் காலனியைச் சேர்ந்தவர் கோன் சந்தோஷ். 33 வயதான இவர் தனது வீட்டில் போனில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார். இளைஞரின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

கடந்த 5 நாட்களில் காமரெட்டி மாவட்டத்தில் 4 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். மொன்னா மாவட்டம் காந்தாரி மண்டல் பகுதியைச் சேர்ந்த அகமது என்ற 35 வயதான இளைஞர் பைக்கில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். கஞ்சிபள்ளி மேல்நிலைப்பள்ளி எதிரே ஆட்டோ ஓட்டிச்சென்ற 40 வயது பெண் ஒருவர் திடீர் மாரடைப்பால் இறந்துபோனார்.

இந்திராநகர் காலனியில் வசிக்கும் முகமது மொமின் என்ற 39 வயது இளைஞர் தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவ்வாறு தொடர் மாரடைப்பு மரணங்கள் நிகழ்ந்து வருவதால் காமரெட்டி மாவட்ட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

click me!