நிறைவு பெற்றது கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்... வரும் 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு!!

Published : May 10, 2023, 06:31 PM ISTUpdated : May 10, 2023, 06:32 PM IST
நிறைவு பெற்றது கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்... வரும் 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு!!

சுருக்கம்

கர்நாடகாவில் பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

கர்நாடகாவில் பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மொத்தம் 37,777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்.. வாக்குப்பதிவு மையத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்..

மக்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவானது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வரிசையில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாக்குச்சாவடி முன்பு பிறந்தநாள் கொண்டாடிய பாஜக வேட்பாளர்!

மொத்தம் 84,119 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 58,500 சிஏபிஎப் வீரர்களும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவரும். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!