மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான அன்று நேரலை நிகழ்ச்சியின் போது தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது மூத்த பத்திரிகையாளர் ரஜத் சர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான அன்று நேரலை நிகழ்ச்சியின் போது தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர்கள் ராகினி நாயக், ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா ஆகியோர் மீது மூத்த பத்திரிகையாளர் ரஜத் சர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர்கள் தனக்கு எதிராக கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ள அவர் ரஜத் சர்மா. X மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தொடர்புடைய வீடியோக்களை அகற்றுவதற்கான வழிமுறைகளை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் தலைவர்கள் 100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
undefined
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ரஜத் சர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் ஆஜராகி, மூத்த பத்திரிகையாளர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். சர்மா மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் பொய்யாக உருவாக்கப்பட்டவை அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி ஜூன் 4 ஆம் தேதி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது என்றும், அப்போது காங்கிரஸ் தலைவர்களால் எந்தப் பிரச்சினையும் எழுப்பப்படவில்லை என்றும், பின்னர், 6 நாட்களுக்குப் பிறகு, இந்த விவகாரம் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவரின் ட்வீட்கள் மற்றும் தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக ரஜத் சர்மா தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் இந்த இடைக்கால மனு மீதான உத்தரவை நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வு ஒத்திவைத்தது.
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்த ஏப்ரல் 4-ம் தேதி அன்று, ரஜத் சர்மா தன்னை தொலைக்காட்சியில் தவறாகப் பேசியதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காவல்நிலையத்திலும் அவர் புகார் அளித்திருந்தார். ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கேரா X தளத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
செல்போன் எண்களுக்கு கட்டணம் வசூல்? ட்ராய் விளக்கம்!
ஜூன் 11 அன்று, காங்கிரஸ் கட்சி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ரஜத் சர்மா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்த குற்றச்சாட்டுகள் பத்திரிகையாளர் என்ற தனது பெயரையும் நற்பெயரையும் கொச்சைப்படுத்தும் சதி என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..