ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு: டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

First Published Dec 1, 2016, 5:47 PM IST
Highlights


ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

ஜல்லிக்கட்டுக்கு எதிராக  உச்சநீதிமன்றம் கடந்த 2014–ம் ஆண்டு தடை விதித்தது. தமிழக அரசு மற்றும் பல்வேறு கட்சிகளின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8ம் தேதி அனுமதி வழங்கி அறிக்கை வெளியிட்டது.

 

இதற்கு எதிரப்பு தெரிவித்து விலங்குகள் நலவாரிய சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று உச்சநீதிமன்றம் ஜனவரி 14–ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுப்படி சில நிபந்தனைகளுடன் தான் அனுமதி அளிக்கப்பட்டது என்றும் வாதாடினாா். ஜல்லிக்கட்டு என்பது ரேஸ் போன்றோ அல்லது பொழுது போக்கு விளையாட்டோ அல்ல.  ஜல்லிக்கட்டு கிராம மக்கள் கொண்டாடும் பாரம்பாியமிக்க விளையாட்டு எனவும் வழக்கறிஞா் எடுத்துரைத்தாா். 

 

மேலும் இந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்காெள்ளப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அறிவிக்கை மூலம் எப்படி மத்திய அரசு ஜல்லிக்கட்டு பாேட்டியை நடத்த அனுமதிக்கலாம்? என கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை டிசம்பர் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

click me!