
தமிழக மக்களுக்கு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இரண்டு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு உடனடி தடை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
மத்திய அரசின் அறிவிக்கையையும் ஏற்றுக்கொண்டு விட்டது.
இதனால் தமிழக மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஜல்லிகட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் பீட்டா அமைப்பு தொடுத்த வழக்கு காரணமாக உச்சநீதிமன்றம், மத்திய அரசும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.
லட்சகணக்கில் மாணவர்கள் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
அவசர சட்டத்திற்கு வழி செய்யும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு பிறப்பித்திருந்த அறிவிக்கையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து கூபா என்ற அமைப்பும் விலங்கு நல வாரியம் உறுப்பினர்கள் சிலரும் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
ஏற்கெனவே அனைத்து வழக்குகளும் ஜன 31 விசாரிக்கப்படும் என்ற நிலையில் இடைக்கால மனுவும் அன்றே விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வந்தது.
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் ஜல்லிக்கட்டே நடக்க விடாமல் இடையூறாக இருக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்தை வாபஸ் பெரும் அறிவிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது.
இதனால் இந்த அவசர சட்டத்தின் மீதான வழக்குகள அனைத்தும் இனி எடுபடாது.
மற்றொரு வழக்காக தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து கூபா அமைப்பு தாக்கல் செய்திருந்த மனு மீது தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் 6 வார காலத்திற்கு வழக்கை ஒத்திவைத்தது.
இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கான உடனடி தடை எதுவும் இல்லை. இதனால் அவனியாபுரம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் தடையின்றி நடக்கும்.
6 வார காலத்திற்கு பின்னர் தமிழக அரசின் விளக்கம் கிடைத்த பின் வழக்கு விசாரணை துவங்கும்.
இதனால் ஜல்லிகட்டுக்கு உடனடியாக எந்த பிரச்னையும் இல்லை என்பது தெளிவானது.
உச்சநீதிமன்றம் தமிழக மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி அளித்துள்ளது என்றே கூறலாம்.