ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் எருது வண்டிப் பந்தயம் ஆகியவற்றை நடத்த தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அரசியல்சாசன அமர்வு விசாரணை நேற்று தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் எருது வண்டிப் பந்தயம் ஆகியவற்றை நடத்த தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அரசியல்சாசன அமர்வு விசாரணை நேற்று தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் மனிதர்களுக்கும், மாடுகளுக்கும் காயங்கள் ஏற்படுகின்றன, உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த விளையாட்டில் உள்ள கொடூரத்தை ஏற்க முடியாது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்று பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவை ஆய்வு செய்து, கடந்த 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்தது.
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 22ம் தேதி விசாரணை
இதையடுத்து, மாடுகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலி்ல் மத்திய அரசு சேர்த்தது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.இந்த தடையை எதிர்த்து தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, அதற்கு விலக்கு பெற்றுன
ந்தச் சட்டத்துக்கு அப்போது குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்தார் இதையடுத்து, ஜல்லிக்கட்டுப்போட்டிகள் மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த அனுமதித்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து பீட்டா, கூபா உள்ளிட்டஅமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இந்த அமைப்புகள் மேல்முறையீடு செய்துள்ளன.
இந்த மனு நீதிபதி கே.எம்.ஜோஸப் தலைமையில், நீதிபதிகள் அஜெய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சிடி ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று முதல் விசாரணைக்கு எடுத்தது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிடுகையில் “ விலங்குகளுக்கு எதிராக கொடூரம் நிகழ்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை மீறுவதையும் ஏற்க முடியாது. சட்டத்திருத்தம் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன, ஏற்கெனவே இருக்கும் சட்டத்தை மீறத்தான் திருத்தம் வந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியால் ஆண்டுதோறும் மாடுகளும், மனிதர்களும் காயம் அடைகிறார்கள். இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.” எனத் தெரிவித்தார்
அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ விலங்குகளுக்கான கொடுமை இழப்பதைப் பற்றி கூறுகிறீர்கள். ஆனால், குத்துச்சண்டை, கத்திச்சண்டையில் மனிதர்களுக்கு காயம் ஏற்படவில்லையா அதில் கொடூரம் இல்லையா. தமிழகஅரசு பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொருட்டு சட்டம் இயற்றியுள்ளது அதற்காக அரசியலமைப்புச் சட்டம் 29ல் பாதுகாப்புப் பெற்றுள்ளது” எனக் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ விளக்கம் வைக்கப்பட்டது. அதில் “ ஜல்லிக்கட்டு போட்டி என்பது மதரீதியான கலாச்சாரத் திருவிழாவின் அடையாளம். மக்களுக்கு மதரீதியான முக்கியத்துவம் இருக்கிறது. இதில் விலங்குகளுக்கு எந்தவிதமான கொடுமையும் இழைக்கவில்லை.
ஜல்லிக்கட்டுப் போட்டி பொழுதுபோக்கிற்காகவோ அல்லது, மகிழ்சிக்காகவோ நடத்தப்படவில்லை, இந்த விளையாட்டுக்கு வரலாற்றுப் பின்புலம், கலாச்சாரப் பெருமை மற்றும் மதரீதியான உயர்ந்த மதிப்புகள் உள்ளன. ஜல்லிக்கட்டு என்பதற்கு ஏறுதழுவதல் என்ற பெயர் இருக்கிறது. அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் ஒரு பண்டிகை.
ஜல்லிக்கட்டு போட்டியை மிகுந்த அக்கறையுடன் நடத்துகிறோம். விலங்குகளுக்கோ, ம னிதர்களுக்க எந்தவிதமான பாதிப்பும்ஏற்படாதவகையில் உறுதி செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. அறுவடைத் திருநாளில் சிறப்பாக விளைச்சலைக் கொடுத்த இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் விதத்தில் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது மாடுகளுக்கு எந்தவிதமான துன்புறுத்தலும், ஆயுதங்கள் கொண்டு தாக்குதலோ, கம்புகளால் அடிக்கவோ, துன்புறுத்தலோ ஏதும் நடக்கவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டி எந்தவிதத்திலும் மனிதத்தன்மையையும், விலங்குகள் நலனையும் மீறவில்லை. விலங்குகள் வன்கொடுமைச் சட்டத்தையும் மீறி நடக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.