Indian Railways:கடந்த 16 மாதங்களாக 3 நாட்களுக்கு ஒரு ஊழியரை வேலையிலிருந்து நீக்கிய ரயில்வே துறை

By Pothy RajFirst Published Nov 24, 2022, 3:21 PM IST
Highlights

கடந்த 2021, ஜூலை மாதத்தில் இருந்து 3 நாட்களுக்கு ஒரு ஊழியரை வேலையிலிருந்து ரயில்வே துறை நீக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021, ஜூலை மாதத்தில் இருந்து 3 நாட்களுக்கு ஒரு ஊழியரை வேலையிலிருந்து ரயில்வே துறை நீக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே துறையில் சிறப்பாகச் செயல்படாதவர்கல், ஊழல்அதிகாரிகள், வேலையை செய்யாதவர்கள் என பலரையும் கண்டறிந்து ரயில்வே துறை வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இதில் பல அதிகாரிகள், ஊழியர்கள் தாமாக விஆர்எஸ் கொடுத்து வெளியேறினர், பலர் நீக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தில் அவசரம், பரபரப்பு ஏன்? உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

அந்த வகையில் கடந்த 16 மாதங்களாக ரயில்வே துறையில் 139 அதிகாரிகள் வேலையிலிருந்து விஆர்எஸ் கொடுத்தனர், 38 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதில் 2 மூத்த அதிகாரிகள் நேற்று வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார், மற்றொரு ராஞ்சியைச் சேர்ந்த அதிகாரி ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கியபோது  பிடிபட்டார் இருவரும் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ரயில்வேஅதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே ஊழியர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். அதனால்தான் 2021, ஜூலை முதல் ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒருமுறை ஒருஊழியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்” எனத் தெரிவித்தார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல்! மாதிரி சேகரிப்பு, வெளிநோயாளிகள் பிரிவு பாதிப்பு

ரயில்வே விதி 56(ஜே)ன்படி, அரசு ஊழியர் ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெறக் கட்டாயப்படுத்துதல் அல்லது டிஸ்மிஸ் செய்தல் ஆகியவற்றுக்குமுன்பாக குறைந்தபட்சம் 3 மாத காலம் நோட்டீஸ் அளித்திருக்க வேண்டும்.

ரயில்வே அமைச்சராக அஸ்வின் வைஷ்ணவ் கடந்த 2021, ஜூலை மாதம் பொறுப்பேற்றார். ரயில்வேஅமைச்சராக அஸ்வினி வந்தபின், “ ரயில்வே துறையில் செயல்படாத அதிகாரிகள் விஆர்எஸ் கொடுத்து புறப்படலாம் அல்லது வீட்டிலேயே இருக்கலாம்” என அடிக்கடி எச்சரித்து வந்தார்.

ரயில்வே துறையில் பெரும்பாலும் எலெக்ட்ரிக்கல், சிக்னல்பிரிவு, மருத்துவப் பிரிவு, சிவில் சர்வீஸ்,போக்குவரத்து, மெக்கானிக், பணியாளர் பிரிவு ஆகியவற்றில் இருந்து ஊழியர்கள் நீக்கப்பட்டனர். விஆர்எஸ் திட்டத்தின் கீழ் ஊழியர் சென்றால் ஆண்டுதோறும் 2 மாதங்கள் ஊதியத்தை கணக்கிட்டு வழங்கிட வேண்டும். 

ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார் பிரியங்கா காந்தி

இதற்கிடையே பதவி உயர்வு மறுப்புக்காக மட்டும் 139அதிகாரிகள் விஆர்எஸ் கொடுத்து காத்திருக்கிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

click me!