Arun Goel: தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தில் அவசரம், பரபரப்பு ஏன்? உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

By Pothy RajFirst Published Nov 24, 2022, 1:40 PM IST
Highlights

தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமனத்தில் இவ்வளவு அவசரம், பரபரப்புடன் மத்திய அரசு ஏன் செயல்பட்டது, 4 பேரில் இவரை தேர்ந்தெடுக்க காரணம் என்று மத்திய அரசுக்கு சராமாரியாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமனத்தில் இவ்வளவு அவசரம், பரபரப்புடன் மத்திய அரசு ஏன் செயல்பட்டது, 4 பேரில் இவரை தேர்ந்தெடுக்க காரணம் என்று மத்திய அரசுக்கு சராமாரியாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தேர்தல் ஆணையர் நியமனத்தில் கொலிஜியம் போன்ற முறையைக் கொண்டுவர வேண்டும், நியமனத்தில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

இந்த மனு கடந்த 18ம் தேதி விசாரணைக்கு வர இருந்த அதே நாளில், தேர்தல் ஆணையராக  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை மத்திய அரசு நியமித்தது. 18ம்தேதிதான் அரும் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், 19ம் தேதி தேர்தல் ஆணையராக அவரை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தேர்தல் ஆணையரை நியமிக்கம் மனுக்கள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரஇருக்கும்நிலையில் இந்த நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோஸப், அனிருத்தா போஸ், ரிஷிகேஸ் ராய், சிடி ரவி , அஜெய் ரஸ்தோகி ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்தியஅரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகினார்.

இந்த மனு நேற்று அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்தியஅரசு வழக்கறிஞரிடம் ஏராளமான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயலை நியமித்த விவகாரத்தில் அனைத்து ஆவணங்களையும் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோஸப் தலைமையிலான நீதிபதிகள் அனிருத்தா போஸ், ரிஷிகேஸ் ராய், சிடி ரவி , அஜெய் ரஸ்தோகி ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. 

அப்போது நீதிபதி கேஎம் ஜோஸப், அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் “ தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமிக்க என்ன மாதிரியான மதிப்பீட்டை மத்திய அரசு பயன்படுத்தியது. அருண் கோயலின் தகுதி குறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லை, நாங்கள் கேட்பது, தேர்ந்தெடுத்தல், நியமனத்துக்கு எந்த மாதிரியான செயல்முறையை பயன்படுத்தினீர்கள். 

தேர்தல் ஆணையர் நியமிக்கும் வழக்கு 18ம் தேதி விசாரணைக்கு  வரஇருந்த நிலையில் அதற்குள் அவசரம் அவசரமாக ஏன் அரும் கோயலை தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. தேர்தல் ஆணையர் நியமனத்தில் இவ்வளவு மின்னல் வேக அவசரம், பரபரப்புடன் மத்திய அரசு ஏன் செய்தது. 

அருண் கோயல் தொடர்பான ஆவணம் அரசின் துறைக்குள் 24 மணி நேரம் கூட நகரவில்லை. அதற்கு ஏன் அவசரமாக நியமனம் நடந்தது. தேர்தல் ஆணையர் பதவி கடந்த மே 15ம்தேதியே காலியாகிவிட்டது, நவம்பர் வரை அமைதியாக இருந்துவிட்டு, திடீரென அவசரம் அவசரமாக அருண் கோயல் நியமிக்க காரணம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.

சத்தியேந்திர ஜெயின் இருப்பது திஹார் சிறையா? ஹாலிடே ரிசார்ட்டா?: மீனாட்சி லெஹி விளாசல்

அதற்கு அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி பதில் அளிக்கையில் “ அருண் கோயல் நியமனம் தொடர்பான அனைத்து அம்சங்களையும்முழுமையாக ஆராயாமல், எந்தக் கருத்தையும் நீதிபதிகள் தெரிவிப்பது சரியல்ல. அனைத்து ஆவணங்களையும் ஆய்வுசெய்யக் கேட்கிறேன்” என்றார்.

அதற்கு நீதிபதி அஜெய் ரஸ்தோகி, அட்டர்னி ஜெனரலிடம் “ நீதிமன்றம் சொல்வதை கவனமாக நீங்கள் கேளுங்கள், அதன்பின் பதில் அளியுங்கள். நாங்கள் தனிநபர் பற்றி கேள்வி கேட்கவில்லை, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம்” என்றார்

அதற்கு அட்டர்னி ஜெனரல் பதில் அளிக்கையில் “ நீதிமன்றத்துக்கு பதில் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெ ரிவித்தார்

நீதிபதிகள் கூறுகையில் “ அருண் கோயல் 1985ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. அருண் கோயல் விஆர்எஸ் கொடுத்த அதேநாளில், அவரின் கோப்புகள் சட்டஅமைச்சகத்துக்கு சென்றுள்ளது. 4 பெயர்கள் அடங்கிய கோப்பு பிரதமர் முன் தாக்கல் செய்யப்பட்டு அந்த 4 பெயரில் கோயலை பிரதமர் தேர்வு செய்துள்ளார். அடுத்த 24 மணிநேரத்தில் குடியரசுத் தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இவை அனைத்தும அவசரஅவசரமாக நடந்துள்ளன

ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார் பிரியங்கா காந்தி

தேர்தல் ஆணையருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பெயர்களும் கவனத்துடன் சட்டஅமைச்சகம் தேர்ந்தெடுக்கவில்லை, அதில் யாரும் ஒருவர்கூட 6 ஆண்டுகளை நிறைவு செய்ய முடியாது. மே 15ம் தேதி தேர்தல் ஆணையர் பதவி காலியாகியுள்ளது. மே முதல் நவம்பர் வரை எந்த அவசரமும் காட்டவில்லை.

திடீரென கோயல் நியமனத்தில் மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது. ஒரே நாளில் தொடங்கி ஒரே நாளில் நியமனம் நடந்துள்ளது. 24 மணிநேரத்துக்குள் இந்த நியமனம் நடந்திருக்கிறது. எந்தவிதமான மதிப்பீட்டில் நியமனம் நடந்துள்ளது, நாங்கள் அருண் கோயலின் தகுதியை கேட்கவில்லை, நியமன முறையைத்தான் கேட்கிறோம்” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி “ இதற்கு தனியாக செயல்முறை, தகுதிகள் உள்ளன, ஒவ்வொரு அதிகாரியையும் அந்த அடிப்படையில்தான் அரசு நியமிக்கிறது. 6 ஆண்டுகள் காலத்தை நிறைவு செய்வார் என நம்புகிறோம். கோயலின் ராஜினாமாவை கவனிக்ககூடாது, அவர் தகுதியைத்தான் கவனிக்கவேண்டும். ” எனத் தெரிவித்தார்

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த விரைவில் சட்டம்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவர் 65 வயதுவரை அல்லது 6 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருக்கலாம். 

நீதிபதிகள் கூறுகையில் “ அருண் கோயல் நியமனத்துக்கான காரணத்தை கூறுவதில் தடுமாறுகிறீர்கள். எப்படி 4பெயர்களில் அருண் கோயலை சட்ட அமைச்சகம் தேர்ந்தெடுத்தது, யார் அதில் 6ஆண்டுகளை நிறைவு செய்வார்கள் என்பதற்கு பதில் இல்லை”எ னத் தெரிவித்தனர்
 

click me!