AIIMS Delhi: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல்! மாதிரி சேகரிப்பு, வெளிநோயாளிகள் பிரிவு பாதிப்பு

By Pothy RajFirst Published Nov 24, 2022, 12:35 PM IST
Highlights

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரில் சைபர் தாக்குதல் நடந்ததையடுத்து, வெளிநோயாளிகள் பிரிவு, ரத்த மாதிரிகள் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்ககப்பட்டன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரில் சைபர் தாக்குதல் நடந்ததையடுத்து, வெளிநோயாளிகள் பிரிவு, ரத்த மாதிரிகள் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்ககப்பட்டன.

இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்தாவது:

தேசிய தகவல் மையத்தின் சர்வரில்தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்கள் இயங்கி வருகிறது. திடீரென புதன்கிழமை காலை 7மணியிலிருந்து சர்வர் செயல் இழந்துவிட்டது.இதனால் வெளிநோயாளிகள் பிரிவு, ரத்த மாதிரிகள் பிரிவு என கணினி தொடர்பான பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார் பிரியங்கா காந்தி

இதையடுத்து, மருத்துவமனையின் அனைத்து சேவைகளும் மருத்துவ அலுவலர்கள் மூலம் நேரடியாக செய்யப்பட்டது. இது குறித்து உடனடியாக தேசிய தகவல் மையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தேசிய தகவல் மையத்தின் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ததில் இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதையடுத்து, இதுகுறித்து முறைப்படியான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வர் பழுதடைந்ததால், வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், டிஜிட்டல் மருத்துவ சேவைகள், ஸ்மார்ட் லேப், பில்லிங், நோயாளிகள் குறித்த அறிக்கை தயாரித்தல், முன்அனுமதிச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. 

நோயாளிகளிடம் இருந்து ரத்தமாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகள் சேகரித்தலும் நேரடியாக நடந்தது. ஒவ்வொரு மாதிரியையும் சேகரிக்கும்போது பார்கோடு மூலம் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்படும். ஆனால், நேரடியாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டதால் குறைவான எண்ணிக்கையில்தான் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த விரைவில் சட்டம்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

எய்ம்ஸ் சர்வரில் ஏற்பட்ட பழுதை நீக்கவும், தேவையான பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் மற்றும் என்ஐசி ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன

இதனால் நேற்று இரவு 7.30 மணிவரை மருத்துவமனை பணிகள் அனைத்தும் அலுவலர்கள் மூலமே நடந்தது.

இவ்வாறு எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவி்த்துள்ளது.

click me!