குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 282 தொகுதிகள் இருந்தாலும் அதில் கவனிக்கத் தக்க சில தொகுதிகள் உள்ளன. அதில் முக்கியமானது பிரதமர் மோடி சொந்த ஊரான வத்நகர் அடங்கிய மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள உன்ஹா சட்டப்பேரவைத் தொகுதிதான்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 282 தொகுதிகள் இருந்தாலும் அதில் கவனிக்கத் தக்க சில தொகுதிகள் உள்ளன. அதில் முக்கியமானது பிரதமர் மோடி சொந்த ஊரான வத்நகர் அடங்கிய மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள உன்ஹா சட்டப்பேரவைத் தொகுதிதான்.
குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாகளுக்கும் மேலாகபாஜக ஆட்சியில் இருந்தாலும், கடந்த தேர்தலில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகர் அடங்கிய உன்ஜா தொகுதியை மட்டும் பாஜகவால் கைப்பற்ற முடியவில்லை. இந்தத் தொகுதியை கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக பறிகொடுத்தது.
குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 182 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருசிறப்பு இருந்தாலும், அதில் பிரதமர் மோடி சொந்த ஊரான வத்நகர் இருக்கும் உன்ஜா தொகுதி கவனத்தை ஈர்க்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தாலும் என்ன பயன், இந்த தொகுதி காங்கிரஸ் கைவசம இருப்பது பாஜகவுக்கு பெரும் மானக் குறைவாக இருக்கிறது.
குஜராத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் புதிய யுக்தி; 2024 தேர்தலுக்கு கை கொடுக்குமா?
பிரதமர் மோடி சிறுவயதில் தனது தந்தையுடன் வந்து வத்நகர் ரயில்நிலையத்தில் தேநீர் விற்றுள்ளார். இதன் நினைவாகவா வத்நகர் ரயில்வே நிலையத்தை மத்தியில் ஆளும் பாஜாக அரசும், மாநிலத்தில் ஆளும் பாஜகவும் மெருகேற்றியுள்ளன.
பிரதமர் மோடி தேநீர் விற்ற கடையைக் கூட அதன் பழமை மாறாமல் அதை நினைவுச்சின்னம்போல் அமைக்கவும்பாஜக திட்டமிட்டது. குஜராத்துக்கு சுற்றுலா வரும் மக்கள் பிரதமர் மோடி தேநீர் விற்ற வத்நகர் ரயில்வே நிலையத்தை வந்து காணும்அளவுக்கு அது சுற்றுலாத்தளமாக பிரபலமாகியுள்ளது.
தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் வத்நகர் இருந்தாலும், இங்குள்ள வத்நகர் ரயில்நிலையம் பரபரப்பானது அல்ல. பிரதமர் மோடி தொடங்கி வைத்த காந்திநகர்-வரீதா ரயில் வத்நகர் ரயில்நிலையத்தைக்கடக்கும் போது நின்று செல்கிறது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் மோடி தேநீர் விற்ற கடையைப் பார்க்கவரும்போது பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என நம்புகிறது.
ஆனால் வத்நகர் ரயில்நிலைய வளர்ச்சிக்கு பாஜக கடுமையாக உழைத்தாலும் இந்த நகரம் அடங்கிய உன்ஜா தொகுதி என்னமோ காங்கிரஸிடம்தான் இருக்கிறது,
குஜராத் தேர்தல்: 12 அதிருப்தியாளர்கள் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்: பாஜக அதிரடி
கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா படேலிடம், பாஜக மூத்த தலைவர் நாராயன் படேல் இழந்துவிட்டார். 79 வயதான நாராயன் படேலை 19ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 40வயதான ஆஷா படேல் தோற்கடித்தார்.
கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் நடந்த நேரம் படேல் சமூகத்தினரின் போராட்டம் நடந்தபின் நடந்த தேர்தல் என்பதால், படேல் சமூகத்தினர் வெறுப்பு அனைத்தும் பாஜகமீது திரும்பியது. ஆனால், இந்த முறை நிலைமை எப்படி மாறுமோ தெரியவில்லை. படேல் சமூகத்தின் முக்கிய தலைவரான ஹர்திக் படேல் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் களம் காண்கிறார்.
இந்த உன்ஜா தொகுதியில் பெரும்பகுதி படேல் சமூகத்தினரும், தாக்கூர் சமூகத்தினரும் உள்ளனர். படேல் சமூகத்தினர் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர், அடுத்ததாக தாக்கூர் சமூகத்தினர் 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த இரு சமூகத்தினர் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் துருப்புச்சீட்டுகளாகும்.
சமாளிக்குமா பாஜக! தெற்கு குஜராத்தில் சவாலாகிய ஆம் ஆத்மி, பழங்குடியினர்: ஓர் அலசல்
இந்த முறை உன்ஜா தொகுதியை கைப்பற்ற பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் மட்டுமல்லாது ஆம் ஆத்மிக்கும் கடும் போட்டியிருக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தும் மோடியின் பிறந்த இடம் இருக்கும் தொகுதியை வெல்ல முடியாத அவமானம் பாஜகவுக்கு தொடர்ந்து இருந்தது. அந்த அவமானத்தை துடைத்து, இந்த முறை உன்ஜா தொகுதியை கைப்பற்றுமா பாஜக என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியிடம் இருக்கும் உன்ஜா தொகுதியை தக்கவைக்க அந்தக் கட்சி கடுமையாகப் போராடும். காங்கிரஸிடம் இருந்து வெற்றியைப் பறிக்க பாஜக மட்டுமல்லாது ஆம் ஆத்மியும் சேர்ந்துள்ளதால், உன்ஜா தொகுதி கவனம் பெற்றுள்ளது.