ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் கிராமத்தில் உள்ள துர்கா கோவிலின் பூசாரி ஒரு முஸ்லீம் ஆவார்.
ராஜஸ்தான் கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது 600 ஆண்டுகள் பழமையான துர்கா தேவி கோவில். இந்த இந்து கோவிலின் நியமிக்கப்பட்ட பாதுகாவலரும் பூசாரியுமான ஜலாலுதீன் கான் என்பவரால் சேவை செய்யப்படுகிறது என்பதுதான் அதிசய தகவல்.
ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் உள்ள போபால்கர் தாலுகாவில் உள்ள பகோரியா என்ற சிறிய கிராமத்தில் உள்ளது துர்கா கோவில். மா துர்கா கோவில் என்றழைக்கப்படும் இந்த கோவில், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. சுமார் 500 படிகள் மூலம் அங்கு செல்லலாம்.
அம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதுபற்றி பேசிய ஜலாலுதீன் கான், தனது முன்னோர்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ள சிந்துவிலிருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து கிராமத்தில் குடியேறி தலைமுறை தலைமுறையாக தெய்வத்திற்கு சேவை செய்து வருகின்றனர்.
ஜலாஜுதீன் கோவில் வளாகத்தை கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், கோவிலில் அனைத்து சடங்குகளையும் செய்கிறார். அவர் தனது குடும்பத்தில் இருந்து 13வது தலைமுறையாக தேவிக்கு சேவை செய்து வருகிறார். கோவிலுக்கு சேவை செய்வதும், கோவிலில் நடக்கும் சடங்குகளை முன்னின்று நடத்துவதும் இந்த பாரம்பரியம், அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது.
இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ
ஜலாலுதீனின் முன்னோர்கள் எப்படி இங்கு வந்தனர் என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. சிந்துவில் இருந்து முஸ்லீம் வணிகர்கள் குழு வணிகத்திற்காக இங்கு வந்ததாகவும், அவர்களில் ஒருவர் சூழ்நிலை காரணமாக பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
ஜலாவுதீனின் மூதாதையர் நோய்வாய்ப்பட்டார் என்றும், பிறகு அவரது உயிர் அம்மனின் அருளால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது என்றும் அவர் நம்பினார். துர்கா தேவியின் இந்த அதிசயத்தைக் கண்டு அவர் திரும்பிச் செல்லாமல், துர்கா தேவியை வழிபடத் தொடங்கினார் என்று கூறினார்.
இதையும் படிங்க..ஏப்ரல் 18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் உள்ளே!!
இதையும் படிங்க..பள்ளியில் டீன் ஏஜ் மாணவர்களுடன் உடலுறவு - சேட்டை செய்த 6 பெண் ஆசிரியர்கள்